தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பீட்ரூட் சட்னி, கொத்தமல்லி சட்னி என்று வகை வகையாக சட்னிகளை அரைத்து இட்லிக்கும் தோசைக்கும் சைடிஷ் ஆக தொட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா. அப்படி என்றால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் கேரட் சட்னி அதுவும் குழந்தைகள் விரும்பக் கூடிய வகையில் எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தருகிறேன். அதை படித்து நீங்களும் உங்கள் வீட்டில் கேரட் சட்னியை செய்து அசத்துங்கள்.
உடலுக்கு ஆரோக்கியத்தையும் வைட்டமின் ஏ யை அள்ளித் தரக்கூடிய கேரட் சட்னியை எப்படி செய்ய வேண்டும் அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரியுமா?
கேரட் சட்னிக்கு தேவையான பொருட்கள்
- எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் மூன்றிலிருந்து ஐந்து வரை
- சிறிதளவு கடலை பருப்பு
- பத்திலிருந்து பதினைந்து வரை சின்ன வெங்காயம்
- இஞ்சி ஒரு சிறிய துண்டு
- பூண்டு ஐந்து பல்
- துருவிய கேரட் இரண்டு
- தக்காளி ஒன்று
- உப்பு தேவையான அளவு
- ஒரு சிட்டிகை சர்க்கரை
தாளிக்க தேவையான பொருட்கள்
1.எண்ணெய் ஒரு டீஸ்பூன்
2. உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
3.சீரகம் ஒரு டீஸ்பூன்
4.பெருங்காயத்தூள்
5.சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அந்த எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு வரமிளகாய் லேசாக அப்படியே தாளித்து, பின் அதில் சின்ன வெங்காயம் பூண்டு, இஞ்சி இவற்றை சேர்த்து ஒன்று முதல் மூன்று நிமிடங்கள் வதக்கி விடவும்.
இதனை அடுத்து இதில் கேரட் தக்காளி சேர்த்து சுவை தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை அளவு சர்க்கரை சேர்த்து மிதமான நெருப்பில் நன்கு வதக்க வேண்டும்.
இதனை பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின் இந்த கலவையை குளிர வைக்கவும். இது குளிர்ந்த பின் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வானொலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அது சூடானதும் தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு தாளிசம் செய்த பின் அதை சட்னியை போட்டு வைத்திருக்கும் பவுலில் மேல் கொட்டவும்.
இப்போது குழந்தைகள் விரும்பும் சுவையான கேரட் சட்னி தயார்.இதனை நீங்கள் இட்லி அல்லது சாதம் தோசை சப்பாத்தி போன்றவற்றோடு தொட்டு சாப்பிடலாம்.