முட்டைக்கோஸ் சாப்பிட்டால் வயிற்றுக்குள் நாடா புழு வருமா..? – உண்மை என்ன..?

அரைகுறையாக சுகாதாரம் இல்லாத காய்கறிகளை சமைத்து உண்ணும் போது நாடாப் புழுகள் உருவாகி நமது நரம்பு மண்டலத்தை பாதித்து வலிப்பு நோயை உண்டாக்கும்.அந்த வரிசையில் முட்டைகோஸ் உள்ளதாக தற்போது செய்திகள் பரவி வருகிறது.

மேலும் இந்த நாடா புழுக்கள் உடலுக்குள் புகுந்து ஆபத்தை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் மரணத்தை ஏற்கக்கூடிய சூழ்நிலை இருப்பதால் இந்த முட்டைக்கோசை உண்பது ஆரோக்கியமானதா? பச்சையாக சாப்பிடுவதால் தான் இந்த நிலை ஏற்படுகிறதா? என்ற பல கேள்விகளுக்கு உரிய தக்க பதிலை நீங்கள் காணலாம்.

 முட்டைக்கோஸ்சை பச்சையாக சாப்பிட்டால் நாடா புழுக்கள் உருவாகும் என்பது ஒரு விதமான புரளி என்றுதான் கூற வேண்டும். மேலும் இந்த நாடா புழுக்கள் நியூ ரோசிஸ்டர்கோசிஸ்  என்ற நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்க கூடிய ஒரு விதமான நோயை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உடையது.

 இதனால் மூளைக்குள் இந்த புழு ஊடுருவி விட்டால் கட்டாய பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.எனவே சுகாதாரமில்லாத திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடங்களில் தோட்டங்களில் வளரும் முட்டைக்கோஸ் பயிர்களில் இத்தகைய புழுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 இதனை மருத்துவத்தில் பராசிட்டிக் இன்பெக்சன் என்று கூறுகிறார்கள். பொதுவாகவே நாம் காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பு நன்றாக கழுவி விட்டு வேகவைத்து சமைத்தாலே அதில் இருக்கும் புழுக்கள் அனைத்தும் இறந்துவிடும்.

 ஆனால் சுகாதாரமில்லாத சூழ்நிலையில் விளையக்கூடிய காய்கறிகளை அரைகுறை வேக்காட்டில் சமைத்து சாப்பிடும் போது இதன் பாதிப்புகள் ஏற்படுவது சகஜம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே சுகாதாரம் இல்லாத கழிவறைகள் அருகில் இருக்கக்கூடிய தோட்டங்களில் இருந்து நீங்கள் முட்டைக்கோஸ் மற்றும் மற்ற காய்கறிகளை பெறுவதை தவிர்த்து விடுதல் நல்லது.

 மேலும் இது குறித்து நிபுணர்கள் கூறுகையில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படக்கூடிய சுற்றுப்புற பாதிப்பின் காரணமாக அதன் அருகில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் இந்த நாடா புழு உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதால் நீங்கள் அந்த காய்கறிகளை பெறும் போது கட்டாயம் சுத்தம் செய்து சமைக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டால் இந்த நிலை ஏற்படாது.இல்லை என்றால் அந்த காய்களை பெறுவதை தவிர்க்க வேண்டும்.

இல்லையென்றால் புழு இருக்கும் பயம் உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் புழு இருக்கக்கூடிய அந்த முட்டைக்கோசை வெந்நீரில் நன்கு கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும். எனவே புழு பயத்தால் முட்டைக்கோசு உண்பதை தவிர்க்காமல் இருங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam