“மனதில் உள்ள குழப்பம் நீங்கி.. நிம்மதி பெற..” – இதை முயற்சித்து பாருங்க..! – 100% ரிசல்ட்..!

கடவுளுக்கே உரிய அபிஷேகங்களில் சந்தன அபிஷேகமும் ஒன்று என்று கூறலாம். இந்த சந்தனத்தை, சந்தன மரத்தில் உருவாகும் கட்டைகளில் இருந்து நாம் எடுக்கிறோம். குளிர்ச்சியை தரக்கூடிய இந்த சந்தனத்திற்கு பஞ்ச பூதங்களின் துணையைப் பெறுவதற்காக நமக்கு பெரும் உதவி செய்கிறது.

 மேலும் இந்த சந்தனத்திற்கு எதிர்மறை சக்திகளை விலக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் உள்ளது.பூஜையில் இரண்டு வகையான சந்தனங்களை நாம் பயன்படுத்துகிறோம். பொதுவாக பூஜைக்கு என்று வெள்ளை சந்தனத்தையும், ரத்த நிற சந்தனத்தையும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

 சிவப்பு சந்தனத்தால் உருவாக்கப்பட்ட மாலையை நீங்கள் ஹோமம் செய்யும் போது அந்த ஹோமத்தில் போடலாம் அல்லது கோவில் திருவிழாக்கள் தெய்வ தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் போது இந்த சிவப்பு மாலையை நீங்களும் அணிந்து கொண்டு பூஜை செய்யலாம்.

 அவ்வாறு இந்த சிவப்பு நிற சந்தன மாலையை நீங்கள் அணிந்து கொண்டு பூஜை செய்யும்போது உங்கள் உடல் வலிமை பெறுவதோடு மட்டுமல்லாமல் மன உறுதியையும் அதிகரித்து தரக்கூடிய ஆற்றல் இந்த மாலைக்கு உள்ளது.

 யாக குண்டத்தில் இந்த மாலையை போடுவதின் மூலம் உங்கள் ஆயுள் கூடும் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் வெள்ளை நிற சந்தனம் மாலையை சாத்துவதின் மூலம் அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

 செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அந்த செவ்வாய் தோஷ கூறுகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி இந்த சிவப்பு நிற சந்தன மாலைகளுக்கு உண்டு.

மேலும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படக்கூடிய அந்த கதிர்வீச்சால் நீங்கள் பாதிப்படையும்போது அந்த கதிர்வீச்சை மட்டுப்படுத்தி உங்களை காப்பாற்றுகின்ற சக்தி இந்த சிவப்பு சந்தன மாலைக்கு உள்ளதால் இதை நீங்கள் யாக குண்டத்தில் போடும்போது அந்த பலனை பெற முடியும்.

 மேலும் அரசாங்க உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த சிவப்பு நிற சந்தன மாலையை நீங்களும் போட்டுக் கொண்டு ஹோம குண்டத்தில் போடுவதின் மூலம் கட்டாய பலன் கிடைக்கும்.

 உங்கள் மன குழப்பத்தை நீக்கி நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தையும் தர சிவப்பு நிறம் சந்தன மாலையை நீங்களும் அணிந்து கொண்டு பூஜைகள் செய்வதின் மூலம் எண்ணற்ற பயன்களை அடைய முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …