அட.. காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் கணவர் இவரா..? இத்தனை அர்ஜுன் படங்களை டைரக்ட் பண்ணி இருக்காரா.?

கடந்த 1990ம் ஆண்டில் வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்.

ஈஸ்வரி ராவ்

அடுத்து பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ராமன் அப்துல்லா படத்தில், விக்னேஷ் ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் 2வது ஹீரோயினாக நடித்திருந்தார். சுள்ளான் படத்தில், தனுஷ் அக்காவாகவும் நடித்திருந்தார்.

காலா

எனினும் ஈஸ்வரி ராவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் அவர் பேசப்பட்ட படம் என்பது பா ரஞ்சித் இயக்கிய காலா படம்தான். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக, வளர்ந்த 3 மகன்களுக்கு அம்மாவாக
அவரது நடிப்பு மிக யதார்த்தமாக இருந்தது.

அதிலும் மத்திம வயதில் இருக்கும் தம்பதிக்கு இடையேயான அன்னியோனியத்தை மிக அழகான ரஜினி – ஈஸ்வரி ராவ் வெளிப்படுத்தி அசத்தியிருந்தனர்.

இந்நிலையில், ஈஸ்வரி ராவ் கணவர் குறித்து தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. அவரும் மிக பிரபலமானவர் என்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திரைப்பட நடிகராக…

நாடோடிகள் படத்தில் ஹீரோ சசிக்குமாருக்கு அப்பாவாக, முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படத்தில் ஹீரோயின் அப்பாவாக நடித்த எல்.ராஜா தான், ஈஸ்வரி ராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல். ராஜா நடிகர் மட்டுமல்ல, இயக்குநராகவும் இருக்கிறார். ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்த சங்கர் குரு, சொந்தக்காரன். தாய்மேல் ஆணை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ரகுவரன் நடித்த குற்றவாளி என்ற படத்தையும் இயக்கியவரும் எல். ராஜா தான்.

சீரியல் டைரக்டர்

அதுமட்டுமின்றி டிவி சீரியல்களையும் எல் ராஜா இயக்கியிருந்தார். ரக்சிதா மகாலட்சுமி, அவரது கணவர் தினேஷ் நடித்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலை இயக்கியவர் எல் ராஜா தான்.

உதிரிப்பூக்கள், தாமரை சீரியல்களில் இயக்கிவரும் இவர்தான். மேலும் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் டைரக்டரும் எல், ராஜாதான்.

திருமணம்…

கடந்த 2005ம் ஆண்டில் ஈஸ்வரி ராவை, இயக்குநர் எல் ராஜா திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார்.

கடந்த 10ம் தேதி வெளியான வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அட.. காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் கணவர் பிரபல நடிகராகவும், டைரக்டராகவும் உள்ள எல் ராஜாவா என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் இவர் அர்ஜுன் படங்களை நிறைய டைரக்ட் பண்ணி இருப்பதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வியப்பை தந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version