தளபதி விஜயுடன் ரொமான்ஸ்..! – பலரும் பார்த்திடாத காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் புகைப்படங்கள்..!

நடிகை ஈஸ்வரி ராவ் நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் அவருடைய மனைவியாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் .

இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. ஒரு பக்கம் ரஜினிகாந்த் ஈஸ்வரி ராவ் ஜோடி ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அழகான முகமும்.. நடிக்கும் திறமையும் இருந்தும் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படாத ஒரு நடிகையாகவே இவர் இருந்து வந்துள்ளார். இவரை தேடி பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் காலா படத்தின் இயக்குனர் பா ரஞ்சித்.

இப்போது ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ஈஸ்வரி ராவ் ஒருகாலத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் ஈஸ்வரி ராவ்.

இந்த படத்தில் நடிகர் வினு சக்ரவர்த்தியின் மகளாக ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஈஸ்வரி ராவ். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, சுல்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

டாப் ஸ்டார் பிரஷாந்த் மற்றும் புன்னகை அரசி சினேகா நடிப்பில் வெளியான விரும்புகிறேன் என்ற படத்தில் நடித்து வந்த இவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகை என்ற விருதும் கொடுக்கப்பட்டது.

இப்படி முன்னணி நடிகையாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கண்டுகொள்ளப்படாத வாடிக்கையாக இந்த விழாவிற்கு நல்ல திருப்புமுனையை கொடுத்தது காலா திரைப்படம் தான்.

இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக டூயட் பாடிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவா இது..? என்று வாய் அடைத்து வைத்துள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …