முட்டை அவியல்.

சைவத்தில் மட்டும்தான் அவியல் செய்வார்களா? என்ற கேள்விக்கு பதிலாக வந்துள்ளது தான் இந்த அசைவ முட்டை அவியல். சைவ அவியலை விட மிக சுவையாக உள்ளதால்தான் இதனை முட்டை அவியல் என்று அழைக்கிறார்கள். பொதுவாக இந்த  சைவ முட்டை அவியல் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக் கூடிய உணவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

 

முட்டை அவியல் செய்ய தேவையான பொருட்கள்

 

  1. முட்டை நான்கு 
  2. மிளகு 2 ஸ்பூன் 
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4.  உப்பு
  5. எண்ணெய் தேவைக்கேற்ப கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அவ்வாறு கொதிக்கும் நீரில் முட்டைகளை மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக போட வேண்டும். கொதிக்கின்ற நீரில் முட்டைகள் சில நிமிடங்கள் நன்கு வேக விடவேண்டும். முட்டை வெந்தவுடன் அந்த நீரில் குளிர்ந்த நீரை ஊற்றி முட்டை தோலை உரித்து எடுக்க வேண்டும்.

 

பின்னர் உப்பு, மிளகு, சீரகத்தை பொடியாக  கொள்ள வேண்டும். இதனை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

 

இப்போது முட்டையின் நடுப்பகுதியில் சிறிதாக கீறவேண்டும். அந்த பகுதியின் உள்ளே  தூளாக்கி வைத்துள்ள மிளகு, சீரகம்,உப்பு சேர்ந்த கலவையை நடுவில் வைக்க வேண்டும்.

இதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கறிவேப்பிலையை போட வேண்டும். பின்னர் முட்டையை போட்டு புரட்டி எடுத்து வைக்கவும்.முட்டை உடைந்து விடாமல் பார்த்து கிளற வேண்டும்.

 

முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவு. அத்தோடு 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க வல்ல இந்த முட்டையை தினமும் உணவில்  சேர்த்துக் கொள்வதால் அவர்களின் ஆரோக்கியம் பேணப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …