துபாய் நைட் பார்ட்டி.. ஒரே நேரத்தில் 10 பேர் கூட.. டார்கெட் வச்சி செய்வாங்க.. ரகசியம் உடைத்த டிக்டாக் இலக்கியா..!

சட்டை பையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ செல்போன் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும் என்ற நிலையில் அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த செல்போனில் டிக் டாக் செயலி ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது.

இப்போது இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடை செய்வதற்கு முன்பு இந்த செயலியில் கவர்ச்சியான நடன அசைவுகளோடு பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தனக்காக வளைத்து பிடித்துக் கொண்டவர் இலக்கியா.

டிக் டாக் இலக்கியா..

அந்த செயலியின் மூலம் தனது கட்டழகு மேனியின் அழகை அப்படியே ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இவர் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். எனினும் அந்த வாய்ப்பு இவருக்கு வந்து சேரவில்லை.

இதனை அடுத்து இவரது கவர்ச்சி குத்தாட்டத்தை ரசிப்பவர்களுக்கு நேரில் விருந்து வைக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் ஆட்டத்தை போட ஆரம்பித்து காசு பண்ண ஆரம்பித்தார்.

அதற்காக வெளிநாடுகளில் நடக்கும் இரவு பார்ட்டிகளில் குத்தாட்டம் போட்ட இவர் மலேசியா, சிங்கப்பூர், துபாய், அரபு நாடுகள் என்று பல நாடுகளுக்குச் சென்று இரவு நேர கிளப்புகளில் குத்தாட்டம் போட்டதால் நல்ல வருமானத்தை பார்த்தார்.

துபாய் நைட் பார்ட்டி..

அந்த வகையில் டிக் டாக் இலக்கியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இனிய பிரபலம் டிக்டாக் இலக்கியா துபாய் நைட் பார்ட்டிகள் குறித்தும் அங்கே எப்படி பணம் சம்பாதிக்கிறோம். என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்தும் விவரமாக கூறியிருக்கிறார். 

அவர் கூறியதாவது துபாய் நைட் பார்ட்டிகளில் நடனம் ஆடுவதற்கு இங்கேயே இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையாக கொடுப்பார்கள். 

அதனை வாங்கிக் கொண்டு நமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு துபாய்க்கு செல்வோம். அங்கு சென்ற பிறகு மருத்துவ பரிசோதனைகள் நடக்கும் நமக்கு ஏதேனும் பரவக்கூடிய வியாதிகள் இருக்கிறதா..? என்பதை தெரிந்து கொள்வார்கள்.. 

அப்படி ஏதாவது பரவக்கூடிய வியாதி நமக்குள் கண்டறியப்பட்டால் உடனே இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள். தங்குவதற்கு சாப்பிடுவதற்கு என அனைத்துமே பாதுகாப்பான முறையில் நம்மை பார்த்துக் கொள்வார்கள். 

ஒரே நேரத்தில் 10 பேர் கூட..

அதே போல இரவு நேர பாட்டிகளில் மோசமான விஷயங்கள் நடக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி எதுவும் அங்கு நடப்பது கிடையாது. இரவு நேர பார்ட்டிகளுக்கு வரும் நபர்கள் அவர்களுடைய வேலையை பார்ப்பார்கள். 

நாங்கள் நடனம் ஆடுவதை பார்த்துக் கொண்டிருப்போம். அதைத் தாண்டி வந்திருக்கக் கூடிய வாடிக்கையாளர்கள் ஏதாவது கேட்டு அதற்கு நாம் சம்மதித்தால் மட்டுமே மற்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும். 

மற்றபடி நம்மை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதே போல நிறைய பேர் பணத்தை அள்ளி வீச வருவார்கள். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து பேர் கூட பணத்தை அள்ளி வீச வருவார்கள்.

இந்த பணத்தை அள்ளி அந்த நிறுவனம் மற்றும் நடனமாட கூடியவர்கள் என அனைவரும் பிரித்துக் கொள்வோம். இதன் மூலம் நாம் சம்பாதிக்க கூடிய தொகை விரைவில் அதிகமாகும். 

ரகசிய உடைத்த இலக்கியா..

ஒரு வேளை நாம் அங்கு நடனமாட பிடிக்கவில்லை என்றால் அந்த இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸை நிகர் செய்யும் வரை அங்கே நடனமாடி விட்டு வர வேண்டும் அல்லது அதிகமாக சம்பாதித்து விட்டும் கூட வரலாம்.

 நான் ஐந்து லட்சம் ரூபாய் பத்து லட்சம் ரூபாய் சம்பாதித்த பிறகு இங்கே திரும்பி வந்து விடுவேன் என பேசி இருக்கிறார் டிக் டாக் இலக்கியா. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam