“பார்த்ததுமே நாவில் நாவில் எச்சிலை வரவழைக்கும் இலந்தை வடகம்..!” எப்படி செய்வது பார்க்கலாமா..!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவைக்கக்கூடிய பாரம்பரிய பண்டங்களில் இலந்தை வடகமும் ஒன்று. இந்த இலந்தை வடகம் இலந்தை பழத்தின் மூலம் செய்யப்படுகிறது.

மேலும் இலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படக்கூடிய இந்த இலந்தையில் மருத்துவ குணங்களும் அதிக அளவு உள்ளது.

அப்படிப்பட்ட இலந்தையைக் கொண்டு செய்யப்படும் இலந்தை வடகத்தை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

இலந்தை வடகம் செய்ய தேவையான பொருட்கள்

  1. 200 கிராம் அளவு இலந்தை பழம்
  2. இருபத்தி கிராம் அளவு 25 கிராம் புளி
  3. வர மிளகாய் 10
  4. கருவேப்பிலை  ஒரு கைப்பிடி அளவு
  5. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. ஒரு அச்சு வெல்லம்

செய்முறை

முதலில் இலந்தை பழத்தை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொட்டையோடு இருக்கும் இலந்தையை  மிக்ஸியில் போட்டு அடித்தால் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

எனவே உங்கள் வீட்டில் இடிகல் அல்லது ஆட்டுகல்லை சுத்தம் செய்த பிறகு நன்றாக இலந்தை பழத்தை கொட்டி நன்றாக இடித்து  கொள்ளவும்.

இதனை நீங்கள் மையாக இடித்து விட்ட பின்பு மிக்ஸியில் இடித்த இலந்தை மற்றும் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் போட்டு இரண்டு முதல் மூன்று சுற்றுகள் சுற்றி விடவும்.

இதில் அனைத்து பொருட்களும் ஒன்றாக சரியான விகிதத்தில் கலந்துள்ளதா என்பதை பார்த்து மீண்டும் தேவைப்பட்டால் ஒரு முறை மிக்ஸியை ஓட்டி விடவும்.

மேலும் மிக்ஸியில் நன்கு அரைபட்டு இருக்கும் இந்த இலந்த வடகத்தை தற்போது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கையில் வடை போல  தட்டி எடுத்தால் நாவில் எச்சிலை வர வைக்க கூடிய இலந்தை வடகம் தயார்.

வீட்டிலேயே தயார் செய்து இருக்கக்கூடிய இந்த கலப்படம் இல்லாத இலந்தை பழத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam