வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சேனை பர்பி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபியாக விளங்கும்.
சேனைக்கிழங்கு எண்ணற்ற சக்திகள் சக்தி உள்ளது. எனினும் இதனை நேரடியாக உண்ண மறுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதை பர்பி போல் செய்து தருவதின் மூலம் அந்தப் பயன் முழுமையாக கிடைக்கும்.
இந்த ரெசிபியை செய்வதற்கு நன்கு முத்திய சேனைக்கிழங்கை நீங்கள் தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பர்பி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
சேனைக்கிழங்கு பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள்
1.நன்கு முத்திய ஒரு கிலோ சேனைக்கிழங்கு
2.அரை லிட்டர் நெய்
3.ஒரு கிலோ முதல் ஒன்னே கால் கிலோ வரை சர்க்கரை.
4.அரை கிலோ டால்டா
5.முந்திரி 150 கிராம்
6.திராட்சை 100 கிராம்
7.ஏலக்காய் 10
8.ஜாதிக்காய் 2
செய்முறை
முதலில் முற்றிய நிலையில் இருக்கக்கூடிய சேனைக்கிழங்கின் தோல்களை நன்கு சீவி எடுத்து விடுங்கள். பின்னர் சேனையை நன்கு தண்ணீரால் இரண்டு மூன்று முறை சுத்தமாக கழுவ வேண்டும்.
பின்னர் எந்த இந்த சேனையை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொண்டு ஒவ்வொன்றையும் துருவியில் நன்கு துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துருவிய துருவலை மீண்டும் நல்ல நீரில் போட்டு நன்கு அலாசி சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை லேசாக சூடுபடுத்தி மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே வாணலியில் சிறிது அளவு டால்டாவை ஊற்றி சூடேற்றவும். இளம் சூட்டில் டால்டா இருக்கும்போது அதில் துருவி வைத்திருக்கக் கூடிய சேனைத் துருவலை அப்படியே போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் வதக்கும் போது சேனையில் இருக்கக்கூடிய நீர் சத்தானது அப்படியே வெளியே வரும். அந்த நீர் சற்று சுண்டும் வரை நீங்கள் நன்கு சேனையை கிளறி விடுங்கள்.
இதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கிளறவும் இப்போது சர்க்கரையும் சேனையும் ஒன்றாக நன்கு கலந்து உள்ளதா என்பதைப் பார்த்து அந்தக் கலவை நன்றாக சேரும் வரை நீங்கள் கிளறும்போது கால் லிட்டர் நெய்யை சேர்த்தபடி கிளறவும்.
இதனை அடுத்து சேனை மற்றும் சர்க்கரை நன்கு சுருண்டு வரக்கூடிய நிலையில் நீங்கள் மீண்டும் சிறிதளவு டால்டாவை போட்டு நன்கு கிளறவும்.இது பர்பி பதத்திற்கு வந்த பின்பு மீண்டும் நெய்யை விட்டு சுருட்ட வேண்டும்.
இப்போது நீங்கள் பொடி செய்து வைத்திருக்கக் கூடிய ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை ஒன்றாக கொட்டி கிளறவும்.
இதனை அடுத்து மீதி இருக்கும் நெய்யில் முந்திரிப்பருப்பு திராட்சையை பொறித்து இந்த கலவையில் போடவும் .சரியான பதத்திற்கு வந்தவுடன் ஒரு தட்டத்தில் டால்டா மற்றும் நெய்யை அடியில் தடவி இந்த கலவையை கொட்டி அப்படியே குளிர விடவும்.
இதனை அடுத்து இளம் சூட்டில் நீங்கள் கத்தியை கொண்டு விரும்பிய வடிவத்தில் பர்பியை வெட்டிக் கொள்ளலாம். இப்போது பிள்ளைகள் விரும்பக்கூடிய சூடான சுவையான சேனைக்கிழங்கு பர்பி ரெடி.