டிக் டாக், Youtube, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதில் ஆரம்ப காலத்தில் வருமானத்திற்காக தான் செய்த வேலைகள் பற்றி பேசி இருந்தார். அதில் முக்கியமான ஒன்று துபாய் நைட் கிளப்பில் நடனம் ஆடக்கூடிய வேலையை பற்றியது.
இது பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய பொழுது இலக்கியா கூடிய விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்தது. அவர் கூறியதாவது, துபாயில் இரவு நேர விருந்துகளில் நடனம் ஆடுவதற்கு அழைத்துச் செல்வார்கள்.
அதற்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பார்கள். அதனை வாங்கிக் கொண்டுதான் துபாய்க்கு செல்வோம். அங்கு சென்று நமக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே வந்து விடலாம்.
ஆனால் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை நாம் சம்பாதிக்கும் வரை அங்கே இருந்து அவர்களிடம் அந்த பணத்தை செட்டில் செய்து விட்டு திரும்பி வரலாம்.
ஆனால் இங்கே விஷயம் என்னவென்றால் பலரும் நினைப்பது போல துபாய் நைட் பார்ட்டிகளில் எந்த கொடுமையான விஷயமும் நடக்காது. நாம் பாட்டுக்கு நடனம் ஆட வேண்டும் அவர்கள் பாட்டுக்கு அவர்கள் இருப்பார்கள்.
நம்மை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதை தாண்டி சில விஷயங்களுக்கு நாம் அனுமதித்தோம் என்றால் தான் அங்கு எல்லாமே நடக்கும். நம்மை வற்புறுத்தையோ கட்டாயப் படுத்தியோ நம்முடன் ஒன்றாக இருப்பார்கள் என்று நாம் பயப்பட தேவையில்லை.
இதற்கு முன்பாக நாம் முழு உடல் நலத்துடன் இருக்கிறோமா..? நமக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா..? என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்த பிறகு தான் நம்மால் அந்த வேலையில் கலந்து கொள்ளவே முடியும்.
இது எதற்காக என்றால் ஒரு வேலை அவர்களுக்கு பாலியல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடாது என்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பெயரில் தான் இது நடக்கிறது.
நிறைய முறை நான் துபாய் சென்று இரவு நேர பார்ட்டுகளில் ஆடி இருக்கிறேன். இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்குவேன். அங்கு சென்று ஒரு 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்த பிறகு மீண்டும் இங்கே வந்து விடுவேன்.
நாம் நடனம் ஆடுவதற்கு என ஒரு தனி சம்பளம் இருக்கும். அதை தாண்டி அங்கு வரக்கூடிய விருந்தினர்கள் நமக்கு போடக்கூடிய பணம்.
இவை அனைத்துமே நம்முடைய சம்பளத்தில் தான் வரும்.. அது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கமிஷனும் அதிலிருந்து சென்று விடும் நிறைய பேர் பணம் போடுவார்கள். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து பேர் போடுவார்கள்.
அந்த பணத்தை எல்லாம் எடுத்து நடனமாடுபவர்களுக்கு மற்றும் அந்த நிறுவனத்திற்கு என பங்கு செல்லும். அந்த வகையிலும் நம்மால் அந்த இரண்டு லட்சம் ரூபாய் இந்த டார்கெட்டை விரைவாக எட்ட முடியும்.
ஒரு வேலை 2 லட்சம் ரூபாய் டார்கெட் எட்டிய பிறகு போதும் எனது விரும்பினால் நாம் திரும்பி வந்துவிடலாம் அல்லது தொடர்ந்து பணியாற்றுவதனால் அங்கே வேலை செய்யலாம் என கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.