” நரம்பாக இருக்கும் நீங்கள் பூசுனது போல் ஆக ..!” – எள்ளு சட்னி செய்து சாப்பிடலாமே..!!

கொளுத்தவனுக்கு கொள்ளு இழைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழியின் மூலம் உடல் பருமனாக இருப்பவர்கள் கொள்ளினை அதிகமாக உணவில் சேர்ப்பதின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

 அது போல் உடல் தேறாமல் அப்படியே ஒல்லியான வடிவத்தில் இருப்பவர்கள் சற்று பூசுனது போல் உடலை வைப்பதற்காக எள்ளினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு நீங்கள் எள்ளினை சேர்ப்பதற்கு வாரத்தில் ஒருமுறை எள்ளு சட்னியை அரைத்து உண்டாலே போதும். உங்கள் மேனி பார்ப்பதற்கு பப்பாளி போல சற்று பூசிய வண்ணமாக புசு புசு என மாறிவிடும்.

எள்ளு சட்னி சட்னி அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

1.எள் 100 கிராம்

2.தேங்காய் கால் கப்

3.வர மிளகாய் 4

4.பூண்டு நாலு பல்

5.புளி சிறிதளவு

6.உப்பு தேவையான அளவு

7.பெருங்காயத்தூள் சிறிதளவு

தாளிக்க

8.தேவையான அளவு எண்ணெய்

9.கடுகு

10.உளுந்து பருப்பு

11.கருவேப்பிலை

செய்முறை

எள்ளினை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து கற்கள் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எள்ளை நீங்கள் வாணிலியில் போட்டு எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், தேங்காய், புளி போன்றவற்றை போட்டு தேவையான அளவு நீரை ஊற்றி அரைத்து விடுங்கள். இதை மிக நன்றாக நைசாக அரைத்த பின் அப்படியே எடுத்து வேறு ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இனி அடுப்பை பற்ற வைத்து வானொலியை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடான பின்பு தாளிப்பதற்காக வைத்திருக்கும் கடுகு மற்றும் உளுந்தை போட்டு வெடிக்க விடவும்.

இது வெடிக்கக் கூடிய நிலையில் நீங்கள் வைத்திருக்கும் கருவேப்பிலை அதில் போட்டு பௌலில் இருக்கும் சட்னியில் இதை கொட்டி விடவும்.

 இப்போது சூடான சுவையான எள் சட்னி தயார். இந்த சட்னியை நீங்கள் இட்லிக்கும் தோசைக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இல்லையெனில் சுடச்சுட சாதத்தோடு பிசைந்து சாப்பிடும் போது டேஸ்ட் அலாதியாக இருக்கும்.

இந்த எள்ளில் பெண்களுக்கு தேவையான கால்சிய சத்து அதிக அளவு இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எண் சட்னியை வாரத்தில் ஒரு முறை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …