எதுக்கும் அளவில்லையா? என் புருஷனை கொன்னுட்டனா!! – ஷகிலாவிடம் எமோஷனல் Talk பானுமதி..

சின்ன திரையில் தற்போது நடித்து வரும் அனைவருமே பெரிய திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தினை தற்போது பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு ரசிகர்களையும் பெற்றுவிட்டார்கள்.

அந்த வகையில் சின்ன திரையில் சீரியல் நடிகையாக நடித்து வரும் நடிகை பானுமதி அண்மை பேட்டி ஒன்றில் ஷகீலாவிடம் தனக்கு நடந்த நிகழ்வினை உருக்கமாக பகிர்ந்து கொண்டதோடு எமோஷனலாகி பல விஷயங்களை அவரோடு ஷேர் செய்ததை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் நடிகை பானுமதி..

சீரியல் நடிகை பானுமதி தற்போது நம்ம வீட்டு பொண்ணு, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் இவர் சமீபத்தில் சீரியல் நடிகை ரிஹானாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்துக்களை கூறியதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலானதை அடுத்து தன் கணவர் மரணம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் எமோஷனலாகி பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் தன் அம்மா தன்னுடைய சகோதரியோடு இருக்கிறார். தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாக கூறிய இவர் இப்படி ஒரு குடும்பம் தனக்கு உள்ளது என்பதை யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் சொல்லிவிட்டார்.

எதுக்கும் ஒரு அளவில்லையா? என் புருஷனை கொன்னுட்டனா..

அதுமட்டுமல்லாமல் தான் திருமணம் செய்து கொண்ட கணவர் நடனர் தனக்கு கல்யாணம் எப்படி நடந்தது என்று கூட தெரியவில்லை. அவர் ஒரு நாள் என்னை பார்த்து பேசினார்.

அப்படிப் பேசிய பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அப்படி திருமணம் செய்து கொள்ளும் போது எனக்கு வயது 15 அவருக்கு வயது 25 தான். எனவே எங்களுடைய வயது வித்தியாசம் பத்து வயதாக இருந்தது.

இந்நிலையில் அவர் என் வீட்டில் வந்து பேசியதை அடுத்து திருமணம் முடிந்த பிறகு பத்து ஆண்டு காலம் அவருடன் நான் சேர்ந்து வாழ்ந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நினைத்து இருந்த சமயத்தில் திடீர் என மஞ்சள் காமாலை நோயால் என் கணவர் மரணம் அடைந்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் மேலும் குடித்துவிட்டு போய்விட்டார். இப்ப நான் தான் கஷ்டப்படுறேன். எனக்கு சப்போர்ட்டா யாரும் இல்லை என்று மன வேதனையோடு பேசினார்.

அது மட்டுமல்லாமல் கணவர் இறந்த பிறகு பல பிரச்சனைகள் உருவானதோடு மட்டுமல்லாமல் என் கணவரை நான் கொன்று பழி தீர்த்து விட்டேன் என்று கூறியது தனது மனதை மிகவும் பாதித்ததாக சொல்லி இப்படி எல்லாமா சொல்லுவாங்க என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

ஷகிலாவிடம் எமோஷனலாய் பேசிய பானுமதி..

என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்ட போது அவர் உயிரை மீட்டெடுக்க பட வேறு வகைகளில் தனியாக நின்று போராடி இருக்கிறேன் அது என் கணவருக்கு மட்டும் தான் தெரியும்.

என் கணவரின் இறப்புக்கு பின்னால் என் இரண்டு குழந்தைகளுக்காக தான் நான் வாழ்ந்து வருகிறேன். என் பையன் எஞ்சினியரிங் படிக்கிறார். என் பையனை பற்றி வெளியில் பேசவே நான் பயந்த காலங்கள் உண்டு என்று எமோஷனலாக ஷகிலாவிடம் பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version