ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முந்தும் EPS..! – சரிவை சந்திக்கும் ஸ்டாலின்..! – லயோலா கருத்து கணிப்பு முடிவுகள்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை நோக்கித்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வையும் திரும்பி இருக்கிறது. பொதுவாக தேர்தல் என்று வரும் பொழுது பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சார்பாக இயங்கி வரும் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கவனம் முழுதும் ஈரோடு கிழக்கில் குவிந்திருக்கின்றது. வாக்காளர்களுக்கு பணம், பாத்திரங்கள், வெள்ளி கொலுசு, கோழிக்கறி என சகல வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

இந்த குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் கூட.. மறுபக்கம் இந்த தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்.? என்ற போட்டி உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்நிலையில், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது.

இந்த அமைப்பின் நிறுவனர் திருநாவுக்கரசு அவர்களின் வழிகாட்டுதலின்படி நிர்வாக இயக்குனர் பால் எபினேசர் மற்றும் தலைமைச் செயலதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலரும் இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு மக்களிடம் நேரடியாக கள ஆய்வு செய்து பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்து அதன் அடிப்படையில் தங்களுடைய முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மக்களின் முடிவு என்ன..? என்பது தேர்தல் முடிவு வெளியாகும் நாள் அன்று தான் தெரியும். ஆனால், இவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி,

  • திமுக காங்கிரஸ் கூட்டணி 42 முதல் 49 சதவீத வாக்குகளும்
  • அதிமுக கூட்டணிக்கு 31 முதல் 36 சதவீத வாக்குகளும்
  • நாம் தமிழர் கட்சிக்கு 6.9 முதல் 10 சதவீத வாக்குகளும்
  • நோட்டா தேமுதிக உள்ள கட்சியினருக்கு 5.58 சதவீத வாக்குகளும்

கிடைக்கும் என அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட வே இன்னொரு சர்வே முடிவையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது.

யாருடைய ஆட்சி சிறப்பானதாக இருக்கிறது..?

அதாவது இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியை தாண்டி.. யாருடைய ஆட்சி சிறப்பானதாக இருக்கிறது..? என்ற கேள்விக்கு

எடப்பாடி பழனிச்சாமி : 53%

மு.க.ஸ்டாலின் : 42%

53 சதவீதம் மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்து இருக்கிறார் என்றும் அதைவிட 11 சதவீதம் குறைவாக அதாவது 42 சதவீத பேர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பான ஆட்சி கொடுத்த வருகிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதில் அதிமுகவின் இடைக்கால தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிட்டத்தட்ட 11% மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து விடும் ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்த தகவல்கள் ஒரு பக்கம் இருக்க இந்த தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மக்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Summary in English : The Loyola Alumni Association has recently conducted a survey on the Erode East bypolls, and the results have been declared. This survey was conducted to study the voting preferences of citizens of Erode East and understand their opinion on current political issues. The survey results provide an insight into the views and opinions of voters in this constituency which will be useful for political parties in planning their strategies for the upcoming bypolls.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …