ஈரோடு தேர்தலில் சீமான் சாதித்தது என்ன?

ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் சீமான் அவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று மாலை நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் படி மறைந்த ஈவேரா அவர்களின் தந்தை இ வி கே இளங்கோவன் அவர்கள் திமுக கூட்டணியின் சார்பாக  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட மேகனா அவர்கள் 10,868 வாக்குகள் பெற்று இருந்தார்.

இது சீமான் அவர்களுக்கு தோல்வியை தந்தாலும், நாம் தமிழர் கட்சியினர் இதை ஒரு நல்ல முன்னேற்ற ஆக பார்க்கின்றனர்.

ஏனெனில் ஓட்டுக்கு 3000 வரை கொடுத்து, ஸ்மார்ட் வாட்ச் கொலுசு உட்பட பல பரிசுப் பொருட்களை கொடுத்து தினமும் சம்பளமாக 500 ரூபாய் கொடுத்து  வெற்றியைப் பெற்றிருக்கும் திமுக கூட்டணியை காட்டிலும், எந்த ஒரு பணமோ பொருளோ மக்களுக்கு கொடுக்காமல் நம்பிக்கையை மட்டும் கொடுத்து 10,868  வாக்குகளை பெற்றெடுப்பது  தங்களை புத்துணர்வு அடைய செய்திருக்கிறது என  நாம் தமிழர் கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் 6.75 சதவீதம் வாக்குகளை  பெற்று இருக்கின்றனர்.

சீமானவர்கள் தேர்தலை சந்தித்து முதல் தேர்தலிலேயே 1.1% வாக்குகளை பெற்றெடுத்தார்.

அடுத்த தேர்தலில் மூன்று புள்ளி நான்கு ஐந்து சதவீதம்  வாக்குகளை பெற்றிருந்தார். போன சட்டமன்ற தேர்தலில் ஏழு சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தார், இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் தனது வாக்கு சதவீதம் சரியாமல் 6.75  சதவீதம் வெற்றி என்பது தங்களுக்கு வெற்றி தான் என நாம் தமிழர் கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதுபோல சுவாரசியமான அரசியல் தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …