இந்த லிங்கை பயன்படுத்துங்க..! ஈஷா வோடு மகா சிவராத்திரி கொண்டாடுங்கள்..!!

தென் கைலாயம் என்று அழைக்கப்படக்கூடிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈசா யோகா மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை ஆதியோகி சிலை முன்பாக மாபெரும் சிவன் ராத்திரி திருவிழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட உள்ளது.

 இந்த கொண்டாட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டு ஈசனின் அருளை பெறுவதற்கு தற்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய லிங்கில் நீங்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

 இதை இலவசமாக நீங்கள்  செய்ய விரும்பினால் தாமிரபரணி என்ற பிரிவை தேர்வு செய்து அதில் உங்கள் பெயர் அலைபேசி எண் ஈமெயில் முகவரி போன்றவற்றை உள்ளீடு செய்தால் போதுமானது.

முதலில் பதிவு செய்பவருகே முன்னுரிமை வழங்கப்படக் கூடிய இந்த இ பாஸ் பெற நீங்கள் பதிவு செய்துவிட்டால் உங்கள் ஈமெயில் முகவரிக்கு இ பாஸ் வந்துவிடும். இதனைக் காட்டி நீங்கள் இந்த நிகழ்வு நடக்கும் ஆரம்பத்திற்கு உள் அரங்கிற்கு சென்று விடலாம்.

 மேலும் இந்த நிகழ்வில் 6 மணிக்கு மேல் தியானலிங்கத்தில் நடக்கப்படும் பஞ்ச பூத ஆராதனையோடு லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை உங்கள் உள் நிலையை பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.

 அதுமட்டுமல்லாமல் சக்தி வாய்ந்த தியானங்களை சத்குரு சத்சங்கம் கருணையால் நீங்கள் பெற முடியும். இந்த நிகழ்வில் ஆதியோகியின் திவ்ய தரிசனத்தை பார்ப்பதோடு நமது பாரம்பரியத்தில் பறைசாற்றும் கலைஞர்களின் இசை மற்றும் உன் நடன விழாவை  பார்த்து ஈசனின் இறையருளை பரிபூரணமாக பெற முடியும்.

மேலும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகின்ற இந்த வேளையில் இந்த விழாவில் எண்ணற்ற பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விஷ்ணுவை வழிபடக்கூடியவர்களுக்கு வைகுண்ட ஏகாதேசி எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சைவ பக்தர்களுக்கு மகா சிவராத்திரி ஒரு மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

 அன்று இரவு முழுவதும் உறங்காமல் நான்கு கால அபிஷேகங்களையும் கண்டு மகிழக்கூடிய நிலை  இருப்பதோடு மட்டுமல்லாமல் முத்தி அடைவதற்கான பிள்ளையார் சுழி போடக்கூடிய நிகழ்வாக கூடி இது இருக்கலாம்.

 இதை அடுத்து எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க கூடிய வாய்ப்பினை ஈஷா யோக மையம் தற்போது தந்துள்ளது. கோவையில் நடைபெறக்கூடிய இந்த பக்தி விழாவில் பங்கேற்க நீங்கள் ஆன்லைனில் ( https://isha.co/msr23-tn) முன்பதிவு செய்து கொள்வதற்கான  வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.

 இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஈசனின் அருளைப் பெறுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam