அதை பண்றதுக்கு எனக்கு யாரும் தேவையில்ல.. எதிர்நீச்சல் நந்தினி தடாலடி..!

சினிமா நடிகைகளை போலவே, சீரியல் நடிகைகளும் மிக விரைவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் பல சீரியல் நடிகைகள் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர்.

அதேபோல் சினிமாவில் வாய்ப்பிழக்கும் நடிகைகளும், ஒரு கட்டத்துக்கு பிறகு சீரியல் பக்கம் சென்றுவிடுகின்றனர்.

அந்த வகையில் நளினி, பத்மப்பிரியா, ராதிகா, ரம்யாகிருஷ்ணன், சுகன்யா, தேவயானி நிரோஷா, ஸ்ரீபிரியா, அம்பிகா, அனுராதா, கனிகா என பல நடிகைகளை சீரியல்களில் காண முடிகிறது.

எனினும் சீரியலில் நடிக்கும் நடிகைகள், அமோகமான வரவேற்பை பெறும் பட்சத்தில் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஹரிப்பிரியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வருபவர் ஹரிப்பிரியா. அவ்வப்போது சீரியலில் அவர் அடிக்கும் டைமிங் காமெடியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் உள்ள பெண்களுக்கு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் வந்துக்கொண்டே இருக்கும். அந்த போராட்டங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் பெண்கள் சமாளித்து வெளியே வருவதுதான் இதன் கதை.

இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து இறந்துவிட்டார். அவருக்கு பதிலாக இப்போது நடிகர் வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்வைஸ் பிடிக்காது

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு அட்வைஸ் என்பது கொஞ்சமும் பிடிக்காது.

நாம் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும்போது, நமக்கு உதவி செய்யாதவர்கள் நமக்கு அட்வைஸ் மட்டுமே செய்வதால் எந்த பலனும் இல்லை. எல்லா கஷ்டங்களையும் தாண்டித்தானே இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

இதை நான் தலைக்கனமாக சொல்லவில்லை. என்னுடைய இத்தனை ஆண்டு பயணத்தில் அங்கு சென்றால் இடிக்கும், இங்கு சென்றால் வலிக்கும் என்பதை கற்றுக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.

நானே பார்த்துக் கொள்வேன்…

இனிவரும் காலத்திலும் என்னை நானே பார்த்துக்கொள்வேன். பிரச்னைகளை சமாளித்துக்கொள்வேன். யாருடைய அட்வைஸ் இதில் எனக்கு தேவையில்லை.

அதுபோல நானும் யாருக்கும் அட்வைஸ் கொடுப்பது கிடையாது. எனக்கு கர்மா, நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கிறது. அதுதான் சில நேரங்களில் நம்மை சுழற்றி விடுகிறது.

அதனால் சில விஷயங்களில் நான் எடுத்த முயற்சிகளை கைவிட்டு இருக்கிறேன். நான் கஷ்டத்தில் இருந்த போது டார்வின் என்ற அண்ணன்தான் உதவியாக இருந்தார்.

இந்த வார்த்தைகள்…

இங்கு தவறு செய்தவர்களே, தைரியமாக வாழும்போது நீ வாழ்வதற்கு என்ன என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இந்த வார்த்தைகள் தான் இவ்வளவு தூரம் வாழ்க்கையில் நான் போராடி முன்னேறி வருவதற்கான காரணம் என்று கூறியிருக்கிறார் ஹரிப்பிரியா.

அட்வைஸ் பண்றதுக்கு எனக்கு யாரும் தேவையில்ல என்று எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா தடாலடியாக கூறி, அதற்கான காரணத்தையும் இந்த நேர்காணலில் தெளிவுபடுத்தி விட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version