Site icon Tamizhakam

இதை செய்யும் ஆண்களை வெறுக்க கூடாது.. சீரியல் நடிகை ஹரிப்பிரியா சொல்வதை கேட்டீங்களா..?

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகள் திரைப்பட நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு தனக்கென தனி மார்க்கெட்டையே உருவாக்கி கொள்கிறார்கள் .

அப்படித்தான் தொடர்ச்சியாக பல்வேறு சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுவர் நடிகை ஹரிப்பிரியா.

எதிர்நீச்சல் ஹரிப்ரியா:

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார் .

இந்த தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டார் ஹரிப்ரியா.

முழுக்க முழுக்க பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் நடித்து வரும் அத்தனை நட்சத்திரங்களும் பிரபலமானவர்களாக பார்க்கப்பட்டு விட்டார்கள். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மறைந்த நடிகரான மாரிமுத்து.

அவர் இந்த சீரியலில் குணசேகரன் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அவர் மரணித்த பிறகு அந்த கேரக்டரில் தற்போது ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

பெண்களை கட்டாயப்படுத்துவது தவறு:

மேலும், இந்த சீரியலில் பிரியதர்ஷினி மதுமிதா உள்ளிட்டோர் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் .

இந்த சீரியல் டிஆர்பியின் உச்சத்தை தொட்டு பிரபலமான சீரியலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகை ஹரிப்பிரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண் சுதந்திரம் பற்றி பேசி இருக்கிறார்.

Women empowerment என்ற பெயரில் பெண்கள் இதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும் என கட்டாயம் விதிக்கிறார்கள்.

பெண்களுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டு அவர்களெல்லாம் இதை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவது தவறு.

இதை செய்யும் ஆண்களை குறை சொல்லக்கூடாது:

எடுத்துக்காட்டாக…. பெண்கள் நிச்சயம் டிரைவிங் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என கூறுவது தவறு. சில பேருக்கு அது பிடிக்கும் . சில பேருக்கு அது பிடிக்காது.

எனவே அது பெண்களாக இருக்கட்டும், ஆண்களாக இருக்கட்டும் அது அவர்களுக்கு பிடிச்ச மாதிரி செய்யட்டும் அது தான் சம உரிமை என்று தெளிவான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

ஆண்கள் என்றால் சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக் கொண்டால்தான் அவர்கள் சரியான ஆண்கள் என கூறுகிறார்கள் .

ஆனால், உண்மையில் சம்பாதிக்காத எத்தனையோ பேர் சிறப்பாக சமையல் செய்கிறார்கள். சிறப்பாக வீட்டு வேலை செய்பவர்களாக இருப்பார்கள் . சிறப்பாக குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள் இப்படியாக இருப்பவர்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

இது தான் உண்மையான சம உரிமை:

எனவே ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிடித்ததை செய்யும் உரிமையைத் தான் நான் உண்மையான சம உரிமையாக என்று அந்த பேட்டியில் நடிகை ஹரிப்ரியா தெளிவாக பேசி உள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக சீரியல் நடிகை ஹரிப்பிரியா கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகரான விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

ஆனால், இவர்களுக்குள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version