வீட்டில் வளர்க்கும் இன்டோர் பிளான்ட்ஸ் செழித்து வளர சில டிப்ஸ்..!!

இன்று பெரும்பாலான வீடுகளில் இன்டோர் பிளான்ட்ஸ் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த இன்டோர் ப்ளாட்ன்சை வளர்ப்பதின் மூலம் வீட்டுக்குள் அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் காற்றும் சுத்தப்படுத்தப்படுகிறது.

 மேலும் இந்த இன்டோர் பிளான்ட் மனிதனின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும் மன பாரத்தையும் குறைக்க உதவி செய்கிறது.

 அப்படிப்பட்ட எந்த இன்டோர் பிளான்சை நல்ல முறையில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இன்டோர்  பிளான்ட்ஸ் செழித்து வளர்வதற்கான டிப்ஸ்

 நீங்கள் இன்டோ பிளான்ட்ஸ் வைத்திருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பதோடு போதிய அளவு நீரை வாரத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ ஊற்ற வேண்டும்.

 அதுபோலவே இந்த தாவரங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது வெயிலில் ஒரு மணி நேரம் வீட்டில் இருப்பதின் மூலம் தாவரங்கள் ஆரோக்கியமாக வளரும்.

 இந்த தாவரங்கள் இருக்கும் தொட்டி மண்ணில் உங்கள் வீட்டு தேங்காய் மட்டையை உரித்து மஞ்சுகளை சிறிது சிறிதாக வெட்டி அதில் போடுவதில் மூலம் நீர் ஊற்றும் போது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை கிடைக்கும்.

 15 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் உங்கள் சமையலறை காய்கறி கழிவுகளில் கிடைக்கும் குப்பைகளை அப்படியே  சிறுசிறு துண்டுகளாக மாற்றி தொட்டி தாவரத்தில் போட்டு அதன் மீது மீண்டும் சிறிதளவு மண்ணைப் போட்டு விடுவதை மூலம் இந்த இன்டோர் பிளான்ட்சுக்கு தேவையான உரம் கிடைத்து விடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் செய்தால் போதுமானது.

தண்ணீரை ஊற்றும் போது தாவரத்தின் இலைகளில் படும்படி ஸ்பிரே செய்து விடுவதால் தூசிகள், குப்பைகள் இருந்தாலும் அவை நீங்கிவிடும்.

 நீங்கள் இன்டோர் பிராட்ன்சை அங்கும் இங்கும் என்று வெவ்வேறு பக்கங்களில் மாற்றி வைக்காமல் குறிப்பிட்ட இடத்தை அதற்கு என தேர்வு செய்து அப்படியே வைத்து வளர்ப்பதின் மூலம் செடி ஆரோக்கியமாக இருக்கும்.

 பூச்சிகளின் தாக்குதலில் இருந்து உங்கள் செடிகளை பாதுகாக்க நாப்தலின் குண்டினை பொடித்து சிறிதளவு நீரில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை அடித்து வந்தால் போதுமானது. மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்வின் மூலம் உங்கள் வீட்டில் இன்டோர் பிளான்ட்ஸ் செழித்து வளரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …