அழகு…அழகு முக அழகுக்கு இத செய்யுங்க.

முகம் பளபளப்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்றால் தினமும் 3 முதல் 4 முறையாவது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அப்போது முகம் பொலிவாக  இருக்கும்.

தினமும் அரிசி கழுவிய கழுநீரில் நமது முகத்தைக் கழுவி வர முகத்தில் உள்ள அழுக்கு கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.

முகம் அழகு பெற தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் பொலிவுடனும். பளப்பளப்பாகவும் இருக்கும். 

வாரத்துக்கு ஒரு முறையாவது முகத்திற்கு ஆவி பிடிப்பது மிகவும் நல்லது ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி ஒரு புத்துணர்வு பிறக்கும். இதன் மூலம் முகப்பொலிவு எளிதில் ஏற்படும்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க முகத்தில் சிறிதளவு முட்டைகோஸ் சாறினை தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை  நீரில் கழுவுவதன் மூலம் விரைவில் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,  அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள்  தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து  வந்தால், முகம் பளிச்தான்.

கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி மற்றும் பூசணி போன்ற காய்கறிகளை சிறு துண்டு எடுத்து, மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு அவற்றுடன் கொஞ்சம் பயத்தமாவை கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …