” முகம் பார்க்கும் போதே தகதகவென மின்ன வேண்டுமா..!” – அதுக்கு இந்த டிப்ஸ் மட்டும் நீங்க ஃபாலோ பண்ணுங்க ..!!

பெண்களுக்கு எப்போதுமே அழகில் அலாதி ஆர்வம் உள்ளது. இவர்கள் முகம் எப்போதும் பார்த்தாலும் பள பளவென மின்ன வேண்டும் என்ற  எண்ணத்தில் பலவிதமான கிரீம்களை  எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி தங்களது முக அழகை மெருகேற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.

 ஆனால் சிங்கிள் பைசா கூட செலவு செய்யாமல் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்க சில டிப்ஸ் உள்ளது. அதை நீங்கள் ஃபாலோ செய்தாலே போதும் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு அழகில் பரிமளிக்கலாம்.

டிப்ஸ் 1

 வீட்டில் கிடைக்கும் புதினா, கருவேப்பிலை, மருதாணி இந்த மூன்றையும் இளம் வெயிலில் உலர்த்தி தூளாக்கிக்   கொள்ள வேண்டும். பின்னர் எந்த தூளினை சிறிதளவு பாலில் கலந்து பின் உன் உங்கள் முகத்தில் பூசி விடுங்கள். குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் உங்கள் முகத்தில்  இது இருக்க வேண்டும்.

 20 நிமிடங்கள் கழித்த பின்பு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவுவதின் மூலம் கோடையில் ஏற்படும் வியர்க்குரு தொல்லையிலிருந்து தப்பிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் பளபளப்பாக கருப்பு நிறம் மாறி காட்சி அளிக்கும்.

டிப்ஸ் 2

 வீட்டில் திராட்சை பழம் இருந்தால் அந்த பழத்தில் நான்கு ஐந்து எடுத்து அப்படியே நன்கு மசித்து அந்த சாரை உங்கள் முகத்தில் தேய்த்து விடலாம். அதுபோல அந்த சக்கையை தூர எரியாமல் அப்படியே கண்ணுக்கு கீழ் உள்ள பகுதிகள் மற்றும் உதடுக்கும் மூக்குக்கும் நடுவே இருக்க கூடிய பகுதிகளில் அப்படியே வைத்திருங்கள். இந்த திராட்சியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு இருப்பதால் உங்கள் சருமத்தை சுத்திகரிப்பதோடு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க கூடிய சக்தி உள்ளது.

மேலும் முகத்தை புத்துணர்வாக வைத்துக்கொள்ள இந்த சாறில் இருக்கும் சத்துக்கள் உதவி செய்கிறது. 20 நிமிடம் கழிந்த பிறகு நீங்கள் உங்கள் முகத்தை கழுவி விடலாம்.

டிப்ஸ் 3

குழந்தைகளுக்கு நலுங்குகாக பயன்படக்கூடிய கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் பால் இவை மூன்றையும் ஒரே அளவு எடுத்து ஒன்றாக கலந்து அந்த பேஸ்டை நீங்கள் முகத்தில் பூசி 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் முகத்தை கழுவுவதன் மூலம் உங்கள் முக பராமரிப்பு அழகாக மாறிவிடும்.

டிப்ஸ் 4

 வீட்டில் இருக்கும் கசகசாவை ஒரு தேக்கரண்டி எடுத்து இரவில் சிறிதளவு நீரில் போட்டு நன்கு ஊற வைத்து காலையில் அதை மை போல அரைத்து பசும்பாலில் கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து வந்தால் கரு நிற திட்டுக்கள் எல்லாம் மாறி வெள்ளையாக சிகப்பலகில் நீங்கள் காட்சி அளிப்பீர்கள்.

டிப்ஸ் 5

கசகசாவுடன் நீங்கள் சிறிது எலுமிச்சம் சாறு, தேன் இரண்டையும் கலந்து நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து நீங்கள் உங்கள் முகத்தை கழுவினால் உங்கள் முகம் பளபளப்பாக மின்னும்.

 மேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்தி பைசா செலவில்லாமல் உங்கள் முகப் பராமரிப்பில் அழகாக மாறிவிடலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …