இளம் பெண்கள் முதல் கொண்டு வயதான பெண்கள் வரை முக அழகை விரும்பாதவர்களை இல்லை என்று கூறலாம். பார்க்கும்போது முகம் பளிச்சென்று தெரிவதோடு பக்காவாக மின்னக்கூடிய வகையில் முகப்பொலிவை இயற்கை முறை கொண்டு நாம் பேணி பாதுகாக்க இயற்கை வழிகள் உண்டு.
முகப்பொலிவுக்காக எண்ணற்ற சோப்புகளை நாம் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள அதீத வேதிப்பொருட்களின் காரணமாக முகம் ஆரம்ப கட்டத்தில் ஜொலி ஜொலித்தாலும் நாளாக நாளாக முகத்தின் இயற்கை தன்மை மங்கி விடும்.
அது மட்டுமல்லாமல் எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
சோப்பு பயன்படுத்துவதற்கு முன்பு நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் முகப்பொலிவை பாதுகாக்க பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பாக மின்னுவதோடு எந்தவித பக்கவிளைவையும் இது ஏற்படுத்தாது.
உங்க முகம் மினுமினுப்பு பெற :
உங்கள் முகம் இயற்கையான பளபளப்பை பெற்று உலக அழகி போல் மினுமினுக்க கடலை மாவு ஒன்று போதுமானது. இதை உங்கள் சருமத்திற்கு ஏற்றபடி கடலை மாவை தயிர் அல்லது பாலில் கலந்து நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை :
1.வறண்ட சருமம்:
உங்கள் முகமானது வறண்ட சருமத்தோடு இருக்குமானால் நீங்கள் கடலை மாவு மற்றும் தயிரினை சேர்த்து உங்கள் முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். இதன் பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தினமும் கழுவி வந்தால் உங்கள் முக அழகு வசீகரிக்கும்.
2. எண்ணெய் சருமம்:
அதுபோலவே எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு அடிக்கடி முகத்தில் எண்ணெய் வழிதல் ஏற்படும். இதை தடுக்கவும் முகம் பளபளப்பாக மாறவும் கடலை மாவுடன் சிறிதளவு பாலை ஊற்றி நன்கு குழைத்து அதனை முகத்தில் தேய்த்துக் கொண்டு அரை மணி நேரம் அப்படியே வைத்துக் கொண்டு அந்தப் பசை சற்று காய்ந்த உடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதுபோல் செய்வதின் மூலம் உங்கள் எண்ணை சருமம் அப்படியே மாறி விடுவதோடு முகப்பொலிவும் ஏற்படும்.
மேலும் முகப்பரு உள்ளவர்கள் முகப்பரு நீங்கவும் முகம் பொலிவு பெறவும் இந்தக் கடலை மாவுடன் சிறிதளவு புதினா இலை சாறு மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து பசை போல முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வர விரைவில் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு முகப்பொலிவு ஏற்படும்.
இந்த முறையை நீங்கள் பயன்படுத்தும் போது எந்த விதமான பக்க விளைவோ அரிப்போ உங்கள் சருமத்தில் ஏற்படாது. ஆனால் இதனைத் தொடர்ந்து நீங்கள் செய்து வருவதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாகும்.
நீங்கள் மாதத்தில் ஐந்து அல்லது ஆறு முறை இதுபோல செய்து பார்த்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.