ரகுவனுக்கு இருக்கும் அதே வியாதி ஃபகத் பாசிலுக்கும் இருக்கு… பொண்டாட்டிதான் பாவம்!.

தமிழில் வில்லன் நடிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு ரகுவரன் வாய்ப்பு தேடி வந்த பொழுது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றுதான் வாய்ப்பு தேடி வந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் அதிகமாக வெற்றியடைந்தது.

தொடர்ந்து வில்லன் நடிகராக மாறினார் நடிகர் ரகுவரன் இந்த விஷயத்தை அவரது நண்பரான சத்தியராஜ் ஒரு பேட்டியில் கூறும்போது கூட நான் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக வந்து பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினேன். ரகுவரன் ஹீரோவாக வந்து பிறகு வில்லனாக நடிக்க தொடங்கினார் என்று கூறியிருக்கிறார்.

ரகுவரனின் பழக்கம்:

எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதனாலயே ஒவ்வொரு திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் அதில் வித்தியாசம் காட்டக்கூடியவராக ரகுவரன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ரகுவரன் குறித்து ஆச்சரியப்படும் விதமாக தகவல் ஒன்றை அவரது மனைவி கூறியிருந்தார். ரகுவரனை திருமணம் செய்து கொண்ட முதல் வாரம் ரகுவரன் மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டார். என்னிடம் மிகவும் மோசமாக அவர் நடந்து கொண்டார்.

ஏன் இப்படி எல்லாம் இருக்கிறார் என்று எனக்கு அவர் மீது ஒரு பயமே வந்துவிட்டது. அப்பொழுதுதான் ரகுவரனின் தாயார் என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார். எந்த ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கிறதோ அதேபோலத்தான் வீட்டிலும் இருப்பார் என்று கூறினார்.

பகத் ஃபாசிலுக்கும் அதே பிரச்சனை:

அது உண்மைதான் ஏனெனில் அஞ்சலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டங்களில் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார் ரகுவரன் என்று அவரது மனைவி கூறியிருந்தார். இதே விஷயத்தை நடிகை நஸ்ரியாவும் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

நஸ்ரியாவின் கணவரான பகத் பாசில் சிறப்பான நடிகராக அனைவராலும் அறியப்படுபவர். பகத் ஃபாசிலுக்கும் இதே மாதிரியான பிரச்சனை உண்டு என்று கூறுகிறார் நஸ்ரியா. ஒரு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரமாக ஃபகத் பாசில் நடித்தால் வீட்டிலும் மிகவும் வில்லங்கமாகதான் இருப்பார் என்று கூறுகிறார் நஸ்ரியா.

சிறந்த நடிகர்களுக்கு எல்லாம் இருக்கும் ஒரு பிரச்சினையாக இந்த விஷயம் இருக்கிறது போல என்று இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version