சாதி பெயரை சொல்லி பொது இடத்தில் சிரிக்கும் சார்பட்டா பரம்பரை நடிகர்.. சந்தி சிரிக்கும் தமிழ் சமூகம்..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரும் குணச்சித்திர நடிகருக்காக பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் ஜான் விஜய் .

இவர் கலகலப்பு திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார்.

மேலும் ஓரம் போ, மௌனகுரு, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்தது.

நடிகர் ஜான் விஜய்:

இந்த நிலையில் தற்போது அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் ஜான் விஜய் நடித்திருக்கிறார் .

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது .

இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட போது நடிகர் ஜான்விஜய் ,இயக்குனர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், அசோக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த நடிகர் ஜான் விஜய் பட குழுவினரோடு பேசும்போது. போட்டோ எடுத்துக்கொண்டார்.

ஜாதி பெயரை சொல்லி கிண்டல்:

அப்போது அருண்பாண்டியனை நீங்கள் தேவர் சாதி இவங்கெல்லாம் ஒரு பக்கமா நில்லுங்க என்று தன்னுடைய மனைவியை ஒரு பக்கமாக நிற்க சொல்கிறார்.

நாங்க நாடார் ஜாதி நாங்க எல்லாம் ஒரு பக்கமா நின்னு போஸ் கொடுக்கிறோம் என்று பொதுவெளியில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசி கிண்டல் அடித்து சிரித்திருக்கிறார் .

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் ஜான் விஜய். நெடிசன் பலரும் அவரை மோசமாக திட்டி தீர்த்து விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக திரைப்படம் எடுப்பவர்கள் ஜாதியும் சாதி பெயரும் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் .

அவரவர் சமூகத்தினை தூக்கி வைத்து பேசும்படி படம் எடுப்பது படங்களில் நடிப்பதாக சமீப காலமாக இருந்து வருகிறது .

ஜான் விஜய்யை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்:

அப்படித்தான் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தங்கலான் திரைப்படம் சாதியை மையப்படுத்தியும் பல கருத்துக்களையும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட அனைத்து படங்களுமே ஜாதியை மையப்படுத்தி கருத்துக்கள் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்தவர் தான் ஜான் விஜய். இவர் தற்போது இவ்வளவு மோசமாக பொது வெளியில் நடந்து கொண்டிருப்பதை பலர் திட்டி தீர்த்து விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோவுக்கு மோசமான விமர்சனங்கள் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

https://x.com/arvind__12/status/1823918170559676465

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version