தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுபாளினியாகவும் மிகச் சிறந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருபவர்தான் விஜே மகேஸ்வரி .
இவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி தொகுபாளினியாகவும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார்.
தொகுப்பாளினி மகேஸ்வரி:
அதன் பிறகு நடிகையாக தற்போது அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வந்த விஜே மகேஸ்வரி புது கவிதை தொடரில் காவியாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .
மேலும் சில திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க தொடங்க அதிலும் நடித்து வருகிறார். முதன்முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த குயில் என்ற. திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விஜே மகேஸ்வரிக்கு பெரிய அளவில் பிரபலத்தையோ அடையாளத்தையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை .
இதை எடுத்து தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் மாடலிங் போட்டோ சூட் உள்ளிட்டவற்றில் அதிக கவனத்தை செலுத்தி வந்த மகேஸ்வரிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அடுத்த அடுத்த கிடைக்க ஆரம்பித்தது.
2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காமெடி கில்லாடிஸ் மற்றும் பெட்டராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான தொகுப்பாளியாக இருந்து வந்த விஜய் மகேஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
அந்த நடிகருக்கு 10வது பொண்டாட்டியா கூட போவேன்…
அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜே மகேஸ்வரி முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.
அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக விஜே மகேஸ்வரி நடித்திருப்பார்.
இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் ஃபேமஸ் ஆனவராக பார்க்கப்பட்டார்.
திரைப்படத்துறையில் எந்த வேலை கிடைத்தாலும் அதை செய்து வந்த பிஜே மகேஸ்வரி சில ஆண்டுகள் ஆடை வடிவமைப்பாளராக கூட பணியாற்றி இருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த மந்திர புன்னகை, சென்னை 28 ,பியார் பிரேமா காதல், டான், விஷமக்காரன், விக்ரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த அனுபவம் குறித்து முதலில் கேட்டதற்கு விஜய் சேதுபதி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பிடித்தமான நடிகர் அவருடன் நான் 3வது மனைவியாக இல்ல 10வது மனைவியாக நடிக்க கூட சம்மதம் தெரிவிப்பேன்.
ஏனென்றால் அந்த அளவுக்கு எனக்கு அவர் மிகவும் பிடித்தமான ஹீரோ என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளாக ஷிவானி, மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் 3 மனைவிகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கணவருடன் விவாகரத்து:
விஜே மகேஸ்வரி கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிஜே மகேஸ்வரி தனது கணவரை கடந்த 2010 ஆம் ஆண்டு பிரிந்து விட்டு விவாகரத்து செய்து விட்டார் .
அதை எடுத்து தற்போது தனது மகனுடன் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். இதனிடையே கிடைக்கும் தொலைக்காட்சி மற்றும் பட வாய்ப்புகள் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் வருமானத்தை சம்பாதித்து குடும்பத்தை நகர்த்தி வருகிறார்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூட சிங்கிள் மதராக தான் எவ்வளவு கஷ்டப்பட்டு சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்.