அக்காவின் வாய்ப்பை பறித்து ஹீரோயின் ஆன நடிகை.. விவரம் தெரிஞ்சா விழி பிதுங்கிடுவீங்க..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த வளர்ந்தவரான நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகவும் இருந்து வருகிறார்.

இவர் முதன் முதலில் கே பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகமானார் .

நடிகை ஊர்வசி:

முதல் படத்திலிருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஊர்வசிக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

இதுவரை கிட்டத்தட்ட சுமார் 800 படங்களில் ஊர்வசி நடித்திருக்கிறார். அவரது முதல் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியான கதிர் மண்டபம் என்ற மலையாள திரைப்படம் தான்.

அப்படத்தில் தான் தனது திரை வாழ்க்கை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது பெறும் 10 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1983 ஆம் ஆண்டு தனது 13 வயதிலேயே ஹீரோயினாக முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்து. புகழின் உச்சத்தை அடைந்தார்.

இவர் மலையாள திரைப்பட நடிகரான மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவருடன் விவாகரத்து:

இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார் பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய ஐம்பதாவது வயதில் சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது குணச்சித்திர நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஊர்வசிக்கு திரைப்பட வாய்ப்பு முதன்முதலில் எப்படி கிடைத்தது என்பதை பற்றி சுவாரசியமான தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அக்காவின் பட வாய்ப்பு தட்டிப்பறித்து ஹீரோயினான நடிகை ஊர்வசி குறித்த சுவாரஸ்யமான இதுவரை வெளி வராத தகவல் வெளியாகி இருக்கிறது.

1983இல் பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜ் ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்து அசத்திருப்பார்.

முந்தானை முடிச்சு படத்தில் வாய்ப்பு:

இப்படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் காமெடி இன்னும் பல இடங்களில் பல மீம்ஸ் கிரியேட்டர்கள் டெம்ப்ளேட் ஆக கூட இன்னும் யூஸ் பண்ணி வருகிறார்கள்.

வெறும் 13 வயதுக்கு இருந்தபோது ஊர்வசி அந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தின் மூலம் தான் ஊர்வசி ஹீரோயின் ஆக ஆனார். ஆனால் அவர் ஹீரோயின் ஆனதே மிகப் பெரிய கதை.

ஊர்வசியின் அக்காவான கலா அஞ்சலி முந்தானை முடிச்சு திரைப்படத்தின் ஆடிஷனுக்கு முதன் முதலில் சென்றிருக்கிறார்.

ஆனால் அப்படத்தின் டயலாக் பேச முடியாமல் திக்கி திணறி இருக்கிறார் ஊர்வசியின் அக்கா. அப்போது அவருடன் சென்ற ஊர்வசி சடால் என அந்த ஸ்கிரிப்ட் வாங்கி கடகடவென படித்து இப்படித்தான் படிக்கணும் என்று பாக்கியராஜையே அதிர வைத்தாராம்.

அக்காவின் வாய்ப்பை தட்டி பறித்த ஊர்வசி:

இதன் பிறகு கலா அஞ்சலி கால்ஷீட் காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போக பாக்கியராஜ் பல ஹீரோயின்களை தேடி வந்திருக்கிறார் .

அந்த சமயத்தில்தான் ஸ்கிரிப்ட் கடகடவென வாசித்து அசத்திய ஊர்வசி அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறார். இவ்வளவு சிறப்பாக டயலாக்கை படித்து அசத்திய அந்த பெண்ணுக்கு நம்ம வாய்ப்பு கொடுத்தால் என்ன என யோசித்து ஊர்வசிக்கு ஹீரோயின் ஆக வாய்ப்பு கொடுத்தாராம்.

ஒருவேளை அன்று அவர் அந்த வாய்ப்பை கொடுத்து வில்லை என்றால் இந்த ஊர்வசி யார் என்று அடையாளம் தெரியாமல் போயிருப்பார்.

எனவே ஊர்வசிக்கு தன்னுடைய அக்காவுக்கு கிடைக்க விருந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுதான் மிகப்பெரிய ஹீரோயினாக பின்னாளில் வளர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version