“கேவலம்..” – ” Fan Made போஸ்டர் இதை விட மாஸா இருக்கும்..” – வலிமை படக்குழுவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

 

இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைப்பட்டாலும், தற்போது வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் தவிர்த்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

 

சுமார் 2 வருடங்களாக ‘வலிமை’ படம் குறித்த எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்யும் போது, கிரிக்கெட் போட்டிகளின் போது, கால்பந்து ஆட்டப் போட்டியின் போது, பூசாரியிடம் குறி கேட்பது என ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்கத் தொடங்கினார்கள். 

 

அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் பெரும் உற்சாகமாக இருந்தனர். 

 

ஆனால், எதோ பள்ளிக்கூட பையன் கைன் மாஸ்டரில் எடிட் செய்தது போல மோசமான எடிட் செய்யப்பட்ட ஒரு மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது படக்குழு. இதனை தொடர்ந்து தங்களது கருத்துக்களை கோபமாக தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam