“மின்விசிறியை இப்படி சுத்தம் செய்யுங்க..!” ஈஸியா வேலை முடியும்..!!

கோடை காலத்தில் மின்விசிறிகளை அதிக அளவு நாம் பயன்படுத்துவோம். காலை முதல் இரவு முழுவதும் தொடர்ந்து 24 ஹவர்ஸ் இது ஓடிக்கொண்டே இருப்பதால் மிக சீக்கிரமே தூசிகள் படிந்து விடும்.

மேலும் இந்த பேன் மிக உயரத்தில் இருப்பதால் இதை தொடர்ந்து நாம் சுத்தம் செய்யாமல் வைத்திருப்போம். அப்படிப்பட்ட சீலிங் பேனை நாம் எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதற்கான டிப்ஸை எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சீலிங் ஃபேன் சுத்தம் செய்வதற்கு உரிய டிப்ஸ்

உங்கள் வீட்டில் சீலிங் ஃபேனை சுத்தம் செய்யும்போது தூசிகள் கீழே விழாமல் சுத்தம் செய்வதற்கு பழைய தலையணை உரையை எடுத்து அதை அந்த சீலிங் ஃபேன் இன் லீபில் அப்படியே மாட்டிவிட்டு சுத்தம் செய்யும்போது அந்த தலையணைக்குள் தூசிகள் அனைத்தும் விழுந்து விடும்.

வேக்கும் கிளீனர் உங்கள் வீட்டில் இருந்தால் அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் ஃபீலிங் பேனை மிக எளிதில் கச்சிதமாக சுத்தம் செய்ய முடியும். மேலும் பானின் லீபில் இருக்கக்கூடிய தூசிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும்.அந்த அளவிற்கு இது மிக நன்றாக சுத்தம் செய்து தரும்.

உங்களிடம் பழைய சாக்ஸ் இருந்தால் அதை தூர எரியாமல் அப்படியே வைத்து நீங்கள் சீலிங் பேன்னை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். பழைய சாக்ஸ் ஒன்றை எடுத்து அதை நீரில் நனைத்து உங்கள் ஃபீலிங் பேனை லீப்பீல் இரண்டு முனைகளையும் துடைத்து விடுங்கள் மிக எளிமையாக சுத்தமாகும்.

காப் வெப் பிரஷ் மூலம் சீலிங் ஃபேனை ஈசியாக துடைக்கலாம். ஒட்டடை குச்சியை பயன்படுத்துவது போல இந்த பிரஷ்சை நீங்கள் பயன்படுத்தி உங்கள் சீலிங் ஃபேனில் இருக்கக்கூடிய தூசிகளை தங்கு தடை இல்லாமல் துடைத்து பளிச்சென்று மாற்றி விடலாம்.

மேற்கூறிய இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்து உங்கள் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் லீப்பை சுத்தம் செய்து பாருங்கள்.நிச்சயமாக கடுமையாக கஷ்டப்பட்ட நீங்கள் மிக எளிமையான முறையில் உங்கள் ஃபீலிங் ஃபேன் அனைத்தையும் மிக எளிமையாக சுத்தம் செய்து விடுவீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …