இது மட்டும் உண்மையா இருந்தா..? கோலிவுட் உன்னோடது..! “தங்கலான்” இயக்குனர் குறித்து ரசிகர்கள்..!

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள கலை ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த படம் குறித்த விமர்சனங்கள் இணைய பக்கங்களில் ரசிகர்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன்படி படத்தின் முதல் பாதி வேற லெவலில் இருப்பதாகவும் கதைக்குள்ளேயே பயணிக்கும் உணர்வை ரஞ்சித் அவர்கள் கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சியான் விக்ரமுக்கு ஒரு பிரம்மாண்ட வெற்றி படமாக இது அமையும் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எனினும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் பொழுது முதல் காட்சியை பார்க்கும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதக்கூடிய விமர்சனங்கள் தான் இது.

உண்மையான விமர்சனங்கள் மதியத்திற்கு மேல் வரக்கூடிய விமர்சனங்கள் தான். எனவே இப்போது வரக்கூடிய விமர்சனங்கள் மட்டும் உண்மையாக இருந்தால் கோலிவுட் உன்னோடது ரஞ்சித் என்று ரசிகர்கள் பலரும் தங்கலான் இயக்குனர் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள தங்களான் திரைப்படம் உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான திரைகளில் திரையிடப்பட்டு இருக்கிறது படம் குறித்த மேலதிக தகவல்களை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version