இதுக்கு தான் கர்ப்பமான வயிற்றை காட்டினேன்.. ஃபரீனா ஆசாத்தை விளாசும் நெட்டிசன்ஸ்..!

நடிகை ஃபரீனா ஆசாத்திடம் கர்ப்பகால புகைப்படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த கேள்விக்கு அவர் அளித்த பதிலால் நெட்டிசன்ஸ் அனைவரும் காண்டாகி அளித்த பதிலை பார்த்தால் நீங்களும் ஷாக்காவீர்கள்.

பெண்களைப் பொறுத்த வரை தாய்மை பேறு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது. இதன் மூலம் பெண்மை முழுமை அடைகிறது என்ற கருத்து வலுவாக உள்ளது.

ஃபரீனா ஆசாத்..

ஃபரீனா ஆசாத் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக திகழும் இவர் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி ரசிகர்களின் மத்தியில் தனக்காக ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இவரது நிகழ்ச்சிகளான கிச்சன் கலாட்டா, அஞ்சறைப்பெட்டி, கோலிவுட் அண்ட் மற்றும் சோரீல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பாங்காக தொகுத்தளித்ததை பார்த்து அனைவரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள்.

இவர் தொகுப்பானியாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அது மட்டுமல்லாமல் இவர் ஸ்டார் விஜய் எதிர்மறையான கேரக்டர் ரோலை பாரதி கண்ணம்மா, சீரியலில் செய்து ரசிகர்களின் நெஞ்சில் தனக்கு என்று போல் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் நாச்சியார்புரம், சூப்பர் அம்மா, பாரதி கண்ணம்மா 2 போடுற சீரியல்களில் நடித்திருப்பதோடு சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதுக்குத்தான் கர்ப்பமான வயிற்றை காட்டினேனா?..

சமீப காலமாக கர்ப்பகால போட்டோ சூட்டுகளை எடுக்கும் பழக்கம் நாடு முழுதும் பரவி கிடக்கிறது. இதற்கு விதை போட்டவர்கள் வேறு யாரும் கிடையாது. நம்ம ஊர் சீரியல் நடிகைகள் தான்.

இவர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது தன்னுடைய முழு வயிரும் தெரியும் விதமாக போஸ் கொடுத்து அதனை இணைய பக்கங்களில் வெளியிட்டு கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தாங்களும் இப்படியான புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை உருவாக்கி இருக்கின்றனர்.

இது குறித்து சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்தில் எதற்காக கர்ப்பமான வயிற்றைக் காட்டி புகைப்படம் வெளியிடுகிறார்கள் என்று வயதான பெண்கள் தரப்பில் இருந்து இளம் பெண்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

குறிப்பாக இதற்கு ஆதரவாக இருக்கும் பக்கத்தில் அமர்ந்திருந்த நடிகை ஃபரீனா ஆசாத்திடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த நடிகை ஆசாத் நான் ஒரு முறை தான் கர்ப்பமாக இருக்கப் போகிறேன். மறுமுறை நான் கர்ப்பமாக இருப்பேனோ? இல்லையோ? அது எனக்கு தெரியாது.

விளாசம் நெட்டிசன்ஸ்..

அதனால் என்னுடைய குழந்தைக்கு ஒரு நினைவாக நான் பார்த்து மகிழ்வதற்காக இந்த புகைப்படத்தை எடுக்கிறேன். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார்.

அதனை அடுத்து எதிர் தரப்பில் அமர்ந்திருந்த வயதான பெண்களில் ஒருவர் நீங்கள் சொல்வதில் எந்த தவறும் இல்லை. நான் கேட்பது உங்கள் வயிற்றை படம் பிடித்து ஏன் ஊருக்கே படம் போட்டு காட்டுகிறீர்கள்.

நீங்கள் படம் பிடித்து உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது. ஏதற்கு ஊருக்கே காட்டுகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத நடிகைகளின் ஃபரீனா ஆசாத் பதில் அளிக்க முடியாமல் திணறினார். அத்துடன் ஃபரீனா ஆசாத்தின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version