தெலுங்கு பேசும் நடிகைகள் பல தமிழ் திரை உலகில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கில் இருந்து வந்தாலும் தமிழை நன்றாக பேசக்கூடிய நடிகையாக திகழ்ந்த படாபட் ஜெயலட்சுமி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாலசந்தரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த நடிகை படாபட் ஜெயலட்சுமி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.
நடிகை படாபட் ஜெயலட்சுமி..
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட படாபட் ஜெயலட்சுமியின் உண்மையான பெயர் சுப்ரியா என்பதாகும். இயக்குனர் சிகரத்தால் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் அவள் ஒரு தொடர்கதை என்ற தமிழ் படத்தில் இருக்கிறார்.
இந்தப் படத்தில் இவர் படாபட் என்ற வசனத்தை தொடர்ந்து பேசியதை அடுத்து படாபட்என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் வைத்து படாபட் ஜெயலட்சுமி என்று ரசிகர்கள் அனைவரும் அன்போடு அழைத்தனர்.
இவர் நடிப்பில் அவள் ஒரு தொடர்கதையை அடுத்து முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் இவரை ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினி, கமல் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் களைகட்டியை இவர் என்டிஆர், சிரஞ்சீவி போன்ற முன்னடி தெலுங்கு சூப்பர் ஸ்டார் ரோடு இணைந்து நடித்து மக்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் பெயரை பெற்று கொண்டார்.
22 வயதில் நடிகை படாபட் ஜெயலட்சுமி எடுத்த விபரீதம் முடிவு..
இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவரை பற்றி ரஜினி கூட அண்மை பேட்டிகள் தனக்கு பிடித்தமான நடிகை படாபட் ஜெயலட்சுமி என்று கூறியிருக்கிறார்.
இவர் மிகவும் திறமையான நடிகையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை சம்பாதித்த இவர் திடீர் என விபரீத முடிவு எடுக்க என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.
இவரது திடீர் முடிவு திரையுலகில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி இந்த முடிவுக்கு காரணம் என்ன என்று பேசி வந்தார்கள்.
இதற்குக் காரணம் எல்லோருக்கும் ஏற்படுகின்ற காதல் தான் இவருக்கும் ஏற்பட்டது. இந்த காதல் யாருடன் ஏற்பட்டது என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.
இவர் எம்ஜிஆரின் அண்ணனான எம் ஆர் சக்கரபாணி யின் மகன் எம் சி சுகுமாரை தான் காதலித்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில் தனது சொத்துக்களை எல்லாம் அவருக்காக தாரை வார்த்து கொடுத்ததை அடுத்து சுகுமார் இவரோடு நெருக்கமாக காதலில் இருந்தும் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.
யாரு காரணம்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..
எம்ஜிஆரின் அண்ணன் மகனான எம் சி சுகுமாரை காதலித்து தனது சொத்துக்கள் முழுவதையும் இழந்த நடிகை ஜெயலட்சுமி இதனால் மன வேதனை அடைந்து விபரீத முடிவுக்கு சென்றார் என்பது தான் இன்று வரை பேசும் பொருளாக உள்ளது.
இதை அடுத்து இந்த விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் திரை விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் Youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் படாபட் ஜெயலட்சுமி விபரீத முடிவுக்கு செல்ல எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் தான் காரணமா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.