பிரபல நடிகை ஃபாத்திமா பாபு செய்தி வாசிப்பாளராக பொதுமக்கள் மத்தியில் பிரபலமானவர்.
பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு விஷமிகள் சிலரால் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மோசமான கதைகள் பிரசுரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இது குறித்து பாத்திமா பாபு தரப்பில் எந்த ஒரு விளக்கமும் இதுவரை தரப்படவில்லை அல்லது பாத்திமா பாபு தான் இப்படி மோசமான கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறாரா என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சில மாதங்களுக்கு முன்பு ஃபாத்திமா பாபு மோசமான சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அவை என்ன.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் இணையவாசி ஒருவர் உங்க ஆத்துக்காரர்.. ஒரு இந்து தானே..
ஆனால் உங்கள் குழந்தைகளில் ஒருவருக்கு கூட இந்து பெயர் கூட வைக்கவில்லையே மேடம் வெரி பேட் அண்ட் சாட் என்று கருத்து தெரிவித்தார்.
இதனை பார்த்த பாத்திமா பாபு, எங்க குழந்தைகளை கேக்குறீங்கனா.. அவருக்கே பிரச்சனை இல்லை.. அப்போ உங்களுக்கு ஏன்..? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நியாயத்தை கேட்டால் கொடூர புத்தியாம்ல.. என்று அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அந்த இணையவாசி.
இதற்கு, உங்க வீட்டு வாசலில் வந்து நியாயம் கேட்டோமா..? என்று மறு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது பொதுத்தளம் பிரபலமான உங்களை பற்றி பொதுவான கேள்வி தானே இது இதற்கு எதற்காக கோபப்படுகிறீர்கள் என்று மீண்டும் பதில் அளித்தார் அந்த இணையவாசி.
இதனை பார்த்து கடுப்பான ஃபாத்திமா பாபு பொதுவெளி என்றால் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் செய்கிறேன் என்று கூட கேப்பீங்களா..? பொது மேடையாம்ல பொது மேடை என்று பகிரங்கமாக பதிலடி கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றார்கள்.