எவ்ளோ போட முடியுமோ போட்டுக்கோங்க.. இரண்டு நடிகர்களிடம் சிக்கி கதறிய கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்த சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டு தெனிந்த மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

2000 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக தனது அவதாரத்தை துவங்கினார் .

கீர்த்தி சுரேஷ்:

முதன் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படம் ஓரளவுக்கு ரீச் ஆனாலும் பெரிய அளவுக்கு அவருக்கு வரவேற்ப்பையோ அல்லது அடையாளத்தையோ கொடுக்கவில்லை.

இருந்தாலும் தனது முயற்சி கைவிடாமல் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ரஜினி முருகன் , பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 ,சண்டக்கோழி 2 ,சீமா ராஜா, மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனிடையே ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி கிளாமரான உடைகளை அணிந்து கவர்ச்சியான ரோல்களில் தயங்காமல் நடித்து வருகிறார் .

இரண்டு நடிகர்களிடம் கதறல்:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீப காலமாக பிரபலங்களிடையே இதுவா அல்லது அதுவா? என்ற விளையாட்டு பிரபலமாகி வருகிறது.

குறிப்பிட்ட பிரபலத்திடம் சக பிரபலங்களை காட்டி இதில் யார் திறமை மிக்கவர்கள் என்ற கேள்வி எழுப்பப்படும்?

அதில் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்.அந்த வகையில் நடிகையை கீர்த்தி சுரேஷிடம் யார் சிறந்த நடனத் திறமை உடையவர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கட்டத்தில் தனுஷா அல்லது அல்லு அர்ஜுனா என்ற சிக்கலான பகுதியில் சிக்கினார்.

எவ்ளோ போட முடியுமோ போட்டுக்கோங்க..

அப்போது இதற்கு பதில் சொன்னால் என்னை செஞ்சிடுவாங்க என கதறினார். எதிரே இருந்த தொகுப்பாளர் வேண்டுமென்றால் இந்த காணொளி வெறும் காமெடிக்காக மட்டும்தான் யாரும் இந்த கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சப்டைட்டில் போட்டு விடலாமா என கேட்கிறார் .

இதனை கேட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஆமாம்… எவ்வளவு போட முடியுமோ போட்டுக்கோங்க என்று அந்த இரண்டு நடிகர்களை பார்த்து கதறுகிறார்.

அதன் பிறகு அல்லு அர்ஜுனை சிறந்த நடன திறமை உடையவர் என்று டிக் செய்கிறார் அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version