பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் அங்கு மிகப்பெரிய நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இடம் பிடித்திருக்கிறார்.
மிகச் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் தனது தனித்துவமான நடிப்பையும் திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுபவர் கங்கனா ரனாவத்.
நடிகை கங்கனா ரனாவத்:
சிறந்த நடிகைக்கான 4 தேசிய விருதுகள்,5 பிலிம் பேர் விருதுகள் , பத்மஸ்ரீ விருதுகள் உட்பட பல உயரிய விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
மிகவும் தைரியமாக தனது கருத்துக்களை முன் வைக்கும் நடிகை கங்காரன் ரனாவத் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை சந்திக்க கூடியவர்.
குறிப்பாக சமூகம் சார்ந்த பாலிவுட் அரசியல் நட்சத்திர நடிகர்களின் வாரிசு அரசியல் உள்ளிட்டவை பற்றி பல கருத்துக்களை வெளிப்படையாக பேசி பல பிரபலங்களின் வெறுப்புக்கு ஆளாகுவார்.
இதனால் இவர் அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதையே வழக்கமாக வைத்திருக்கிறார் நடிப்பையும் தாண்டி சொந்த தயாரிப்பு நிறுவனமான மணிகர்ணிகா என்ற பிலிம்ஸ் தொடங்கி நடத்தி வருகிறார்.
தமிழ் படங்களில் கங்கனா:
இதனிடையே கங்கனா தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோவான ஜெயம் ரவிக்கு ஜோடியாக கடந்து 2008 ஆம் ஆண்டில் வெளிவந்து தாம் தூம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்தில் அவரின் அழகும் அவரது நடிப்பும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தது .
அதன் பிறகு தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.
சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார் . இந்த படம் அவ்வளவாக எதிர்பார்த்தபடி பேசும்படியாக அமையவில்லை.
மேலும், இவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அதில் பணியாற்றி வருகிறார். எந்த ஒரு கருத்துக்களையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை கங்காரன் ரனாவத்.
சமீப நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து வந்தார். மேலும் தற்போது நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி மங்களா தொகுதியில் கங்கனா போட்டியிட்டுள்ளார்.
அரசியலில் கங்கனா:
இந்த லோக்சபா தேர்தலில். காங்கிரஸ் வேட்பாளரான விக்ரமாதித்யா சிங்கை 52.9% ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தேர்தலிலே வெற்றி பெற்று எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படியான நிலையில் டெல்லிக்கு செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த நடிகை கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் பணியில் இருந்து வந்த சிஐஎஸ்எப் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் திடீரென கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார்.
பின்னர் விசாரித்ததில் விவசாயம் குறித்தும் விவசாயிகள் குறித்தும் கங்களா ஏதோ கருத்து தெரிவித்ததாகவும் அது முரண்பாடாக இருந்ததாக பெண் காவலாளி கோபம் அடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது .
கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்:
இதை அடுத்து இந்த விவகாரத்தால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. எம்பியாக வெற்றி பெற்றுள்ள கங்கனாவை அறைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கங்கனா போலீசில் புகார் அளித்துள்ளதோடு அந்த பெண் காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இச்சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் போலீசாரை உயர் அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.