தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து பின்னர் மார்க்கெட் இருந்து அடையாளமே தெரியாமல் போன நடிகர் பிரசாந்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….!
தமிழ் சினிமா உலகின் ஆணழகன் என்றும் காதல் இளவரசர் எனும் ஒன்றும் போற்றப்பட்டு வந்தார் நடிகர் பிரசாந்த். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமான ஒரு கிடுகிடுவென அதிகரித்தனர்.
பிரபலமான நடிகரும் தயாரிப்பாளரும் ஆன தியாகராஜனுக்கு இவர் மூத்த மகனாக பிறந்தார் பிரசாந்த். இவருக்கு ப்ரீத்தி என்கிற தங்கையும் உண்டு.
நடிகர் பிரசாந்த்:
சின்ன வயதில் பரதநாட்டியம், ஜிம்னாஸ்டிக், கராத்தே, சிலம்பம் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மிகவும் ஆர்வம் கொண்டவராக தென்பட்டு வந்தார்.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர் படிப்புக்கான வாய்ப்பு தேடி வந்த போதும் அதை எல்லாம் வேண்டாம் என மறுத்துவிட்டு திரைப்படத்துறையிலே தனக்கு அதிகம் ஆர்வம் இருப்பதை தெரிவித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!
தந்தையைப் போலவே சினிமாத்துறையில் தானும் மிகப்பெரிய நடிகராக வேண்டும் என தனது லட்சியத்தை கொண்டு குதிரை சவாரி செய்வது ,பியானோ வாசிப்பது என பல பயிற்சிகளை கற்று தெரிந்தார்.
சீறிப்பாய்ந்த சினிமா ஆசை:
சினிமாவிற்கு தகுதியான நபராக தன்னை தயார்படுத்திக் கொண்ட நடிகர் பிரசாத்திற்கு சொந்தமாக சென்னையில் “பிரஷாந்த் கோல்ட் டவர்” என்ற பெயரில் அடுக்குமாடி நகை கடை ஒன்றும் இருக்கிறது.
இந்தியாவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியா படிப்பை படித்து முடித்துவிட்டு லண்டனில் உள்ள புகழ்பெற்ற இசை கல்லூரி ஒன்றில் முறையாக இசை பயின்றார்.
அதன் பின் தன்னுடைய 17 வயதிலே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தனது முதல் படத்தை கொடுத்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரசாந்த் நடிக்க ஆரம்பித்த வெறும் இரண்டே ஆண்டுகளுக்குள் பாலிவுட்டில் கால்பத்த முதல் தமிழ் நடிகராக பெரும் புகழ்பெற்றார்.
அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் தொடர் வெற்றி படங்களும் அமைந்தது. தமிழ் சினிமாவின் பெரும் புகழ்பெற்ற இயக்குனரான பாலு மகேந்திராவின் வண்ண பூக்கள்,
மகுடம் சூட்டிய வெற்றிப்படங்கள்:
மணிரத்தினம் இயக்கத்தில் திருடா திருடி, ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் உள்ளிட்ட மாபெரும் வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்து தொட்டதெல்லாம் ஹிட் அடித்து கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!
பிரம்மாண்ட இயக்கத்திற்கு பெயர் போன சங்கரின் ஜீன்ஸ் படத்தின் கதையை பிரசாந்த் கேட்டவுடன் தன் கைவசம் இருந்த ஏழு படங்களை வேண்டாம் என விலக்கிவிட்டு,
சங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்து கொடுத்துள்ளார். அந்த படத்தின் மீது அவருக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டு அந்த படம் அவர் எதிர்பார்த்தது போலவே மாபெரும் வெற்றியும் பெற்றது.
1990 முதல் 2005 வரை அஜித் விஜய்க்கு இணையாக முன்னணி நடிகராக தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் பிரசாந்த் .
பகை, வெறுப்புகள் இல்லாத ஒரே நடிகர்:
சோசியல் மீடியாவில் ஒரு ஹீரோக்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்ட் இருக்கிறது என்றால் அது உங்களுக்கு தான் என்று யாரோ ஒருத்தர் சொன்ன கமெண்ட்டை கேட்டபோது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு என் நடிகர் பிரசாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஆக, யாராலும் வெறுக்கப்படாத வெறுக்க முடியாத நடிகராக பிரசாந்த் வலம் வந்தார். லண்டன் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று “பிரசாந்த் ஸ்டார் நைட் “என்ற பெயரில் நட்சத்திர கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இதன் மூலம் இந்தியாவை தொடர்ந்து வெளிநாடுகளிலும் பிரசாந்த்திற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க அதிகரித்தது.
பிரசாந்த் திருமணம்:
கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையில் நடிகர் பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்பவருக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஹனிமூன் எங்கே செல்வது என்பதிலேயே இருவருக்கும் பிரச்சனையும் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது.
சிங்கப்பூர் தான் போக வேண்டும் என அடம் பிடித்தாராம் கிரகலட்சுமி. மனைவியின் பேச்சைக் கேட்டு சிங்கப்பூருக்கு சென்ற நடிகர் பிரசாந்த் ஹனிமூனில் மனைவி தன்னுடன் கூட நேரத்தை செலவழிக்காமல்,
இதையும் படியுங்கள்: துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!
போனில் யாருடனோ மணி கணக்கில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து நடிகர் பிரசாத்துக்கு கோபம் தலைக்கேறிவிட்டதாம்.
ஹனிமூனில் மனைவி கள்ளத்தொடர்பு:
பிறகுதான் கிரகலட்சுமி பற்றி தீர விசாரித்ததில் இவர் ஏற்கனவே நாராயணன் வேணு பிரசாந்த் என்பவர் உடன் திருமணமானவர் என்பதை தெரியவந்ததை கேட்டு பிரசாந்த் பேரதிர்ச்சி அடைந்து விட்டாராம்.
ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் அதை எல்லாம் மறைத்து மணமேடையில் உட்கார்ந்து கிரகலட்சுமி பார்க்கும்போது இவர் சாதாரண கிரகலட்சுமி அல்ல பெரிய தைரியலட்சுமி என்று சொல்லலாம்.
கிரகலட்சுமி வேணு பிரசாதம் 1998 ஆம் ஆண்டு ரெஜிஸ்டர் பதிவு திருமணம் செய்திருப்பதால் தனக்கும் கிரகலட்சுமிக்கு நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிடக்கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில்,
பிரசாந்த் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் முதல் திருமணத்தை கிரகலட்சுமி மறைத்து இரண்டாம் திருமணத்தை செய்து கொண்டதால் கிரகலட்சுமி திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது.
ஆனாலும் பிரசாந்தை விட்ட பாடு இல்லாமல் கிரகலட்சுமி உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரை இழுத்தடித்தார்.
கடைசியில் கோர்ட்டே மனம் இறங்கி பிரசாந்த் அந்த பெண்ணிடம் இருந்து விடுதலை செய்தது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிகட்டி பறந்த பிரசாந்த் தனது சொந்த வாழ்க்கையின் கோர்ட்டு கேஸ் என அலைந்தால் படங்களில் கவனம் செலுத்தாமல் அப்படியே பின் தங்கிவிட்டார்.
கோர்ட், கேஸ் அலைந்த பிரசாந்த்:
சர சரவென அவரது மார்க்கெட் காலியானது. தான் செய்யாத தவறுக்காக 17 வருடங்களுக்கு மேலாக நிம்மதி இல்லாமல் கோர்ட்டு கேஸ் என அலைந்து கொண்டு இருந்தார் பிரசாந்த்.
இத்துடன் மீடியாக்களும் அவரை குற்றவாளி போல் விரட்டி விரட்டி போட்டோக்களை புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டு அசிங்கப்படுத்தியது.
நடிகராக, மிகச்சிறந்த மனிதராக, யாருக்கும் விருப்பு வெறுப்பின்றி, காதல் கிசுகிசுக்கள் , சர்ச்சைகள் என எதிலும் சிக்காமல் வாழ்ந்து வந்த பிரசாந்துக்கு திருமண வாழ்க்கை இவ்வளவு மோசமாக முடிந்து விட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது.