தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் சூர்யா மற்றும் விக்ரம் பற்றி பல அறிந்திடாத விஷயங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு நடிகர்களுமே ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் தங்களை நிலை நிறுத்த கடுமையான போராட்டங்களை சந்தித்திருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்து, அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியாய் அமைந்ததோடு மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
இந்த திரைப்படம் வெளி வருவதற்கு முன்பு விக்ரம், சூர்யாவின் சில காட்சிகளை இந்த படத்தில் இருந்து நீக்குமாறு பாலாவிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த விஷயமானது நடிகர் சூர்யாவின் காதுக்குச் சென்ற பிறகு அவர் விக்ரமோடு பேசி பழகுவதை அப்படியே நிறுத்திவிட்டார்.
இதனை அடுத்து சூர்யா தன் மேல் கோபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரம், சூர்யாவை வெறுப்பு ஏற்றுவதற்காக ஜோதிகாவை தனது படங்களில் நடிக்க வைத்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இதன் மூலம் சூர்யா மற்றும் விக்ரம் இடையே மன கசப்பு அதிகரித்து போனது. இந்த நிலையில் தான் சூர்யா ஜோதிகாவை காதலிக்க, அந்த காதல் திருமணத்தில் முடிய இருந்தது. எனவே ஜோதிகா திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பு தரவில்லை.
எனவே தன் திருமணத்திற்கு கூட சூர்யா, விக்ரமை அழைக்காத அளவுக்கு மனக்கசப்பு முற்றியிருந்த காரணத்தால் தான் விக்ரம் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதவாறு அழைப்பிதழை தந்து அழைக்கவில்லை என்று சினிமா வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளது.
இந்த விஷயம் இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த செய்தியாய் இருப்பதால், ரசிகர்கள் பல வகைகளில் பேசி வரும் நிலையில் இந்த செய்தி எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. எனினும் இது குறித்த உண்மையை சூர்யா வெளியிட்டால் மட்டுமே தெரிய வரும்.
இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் கங்குவா படத்தையும், விக்ரமின் ரசிகர்கள் தங்கலான் படத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் இது போன்ற விஷயங்கள் வெளி வருவது இரு ரசிகர்களின் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.