லட்சங்களை பதுக்கும் நயன்தாரா.. ஆண்ட்ரியா தொல்லை ஒரு பக்கம்.. நடு தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்சமயம் படங்களுக்கான தயாரிப்பு செலவு என்பது முன்பை விட மிகவும் அதிகரித்து இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் எடுத்து விடுவார்கள்.

அதற்கான தயாரிப்பு செலவுகள் என்பது ஒரு கோடியை தொடுவதே கடினம் என்று இருக்கும். இப்பொழுது இருக்கும் விலைவாசியை வைத்து பார்த்தால் கூட 5 கோடிக்குள் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும்  என்கின்றனர் பழைய தயாரிப்பாளர்கள்.

லட்சங்களை பதுக்கும் நயன்தாரா

ஆனால் தேவையில்லாத காட்சிகளை படமாக்கி இரண்டு மணி நேர படத்திற்கு ஆறு மணி நேரம் படத்தை எடுத்து கடைசியில் உட்கார்ந்து கட் செய்து படங்களை வெளியிடுகின்றனர். இந்த மாதிரி தேவையில்லாமல் தயாரிப்பாளர்கள் காசை விரயம் செய்யும் விஷயமாக சினிமா மாறி உள்ளது.

இதனால்தான் அந்த காலத்தில் பெரும் தயாரிப்பாளர் நிறுவனமாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம் கூட இப்பொழுது படம் தயாரிப்பதை நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா விநியோகஸ்தரான கே.ராஜன் ஒரு மேடையில் பேசியிருந்தார்.

ஆண்ட்ரியா தொல்லை ஒரு பக்கம்

அதில் அவர் கூறும்பொழுது தேவையில்லாத செலவு என்பது சினிமாவில் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு காலத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் மட்டும்தான் கேரவன் வசதி இருக்கும். மொத்தமே ஒரு படத்திற்கு இரண்டு கேரவன்தான் நிற்கும்.

ஆனால் இப்பொழுது ஒரு படத்திற்கு 7ல் இருந்து 8 கேரவன் நிற்கிறது. மேலும் நயன்தாரா மாதிரியான நடிகைகள் எல்லாம் கூடவே 15 அசிஸ்டன்ட்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்தான் சம்பளம் தரவேண்டும். அதுவே ஒரு 50 லட்சம் தனியாக போய் விடுகிறது.

இது ஒரு பக்கம் என்றால் ஆண்ட்ரியா ஒரு தமிழ் நடிகை ஆனால் அவர் பாம்பேவில் இருந்துதான் மேக்கப் செய்ய ஆள் வேண்டும் என்று கேட்கின்றார். அந்த மாதிரி பாம்பேவில் இருந்து மேக்கப்புக்கு வரும் நபர்கள் ஒரு பக்கம் காசை தீட்டி விடுகின்றனர்.

தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்

இந்த மாதிரியான பெரும் நடிகைகள் செய்யும் விஷயங்கள் தயாரிப்பாளர்களை மிக அதிகமாக பாதிக்கிறது. படத்திற்கான செலவுகள் மட்டுமின்றி இந்த மாதிரி தேவையற்ற செலவுகளையும் தயாரிப்பாளர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

இதனால் கடைசியில் தயாரிப்பாளர்கள் வந்து ரோட்டில் தான் நிற்கிறார்கள் ஏனெனில் இவர்கள் நடிக்கும் படங்கள் ஓடவில்லை என்றாலும் இவர்களுக்கு அதனால் என்ன நஷ்டமும் இல்லை தயாரிப்பாளருக்குதான் நஷ்டம் என்று கோபமாக பேசியிருக்கிறார் கே ராஜன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version