“F**ing B**d..” – இன்ஸ்டாகிராமில் ரசிகரிடம் கெட்ட வார்த்தையில் பதில் கூறிய லக்ஷ்மி மேனன்..!

 

நடிகை லக்ஷ்மி மேனன் ரசிகர் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டியது ஒட்டு மொத்த ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். 

 

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லக்ஷ்மி மேனன், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். படிப்புக்காக இடையில் ஒரு பிரேக் விட்டார் லக்ஷ்மி மேனன்.

 

அவ்வளவுதான்.. தமிழ் சினிமா அவரை மறந்தேவிட்டது. அவரது நடிப்பில் படங்கள் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார். அதன்பிறகு லக்ஷ்மி மேனனுக்கு எந்த படமும் கிடைக்கவில்லை. 

 

 

சமீபகாலமாக லட்சுமிமேனன் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் ஆத்திரமடைந்த லட்சுமிமேனன் அதைப் பற்றி விமர்சித்தார். 

 

மேலும் தன்னிடம் அத்து மீறும் ரசிகர்களுடன் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டு வருகிறார். தன்னை மறந்து விட்ட ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே ரசிகர்களுடன் ஒட்டி உறவாடி வருகிறார் லட்சுமி மேனன்.அவரது உடல் எடை கூடிப்போனதே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் என கூறப்பட்டது. 

 

தொடர்ந்து நடனம் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அண்மையில் தான் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான போட்டோக்களை ஷேர் செய்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி பொழுதை கழித்து வந்தார். 

 

 

அப்போது ரசிகர் ஒருவர், லட்சுமி மேனனிடம் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு கெட்ட வார்த்தை கலந்த வார்த்தையில் அவர் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam