முதன் முதலில் என் வீட்டில் தான் அது நடந்துச்சு.. சங்கீதா ஓப்பன் டாக்..!

சமீப நாட்களாக திருமணம் என்பது இந்த வயதில் தான் செய்ய வேண்டும். இவருடன் தான் செய்ய வேண்டும் ஒரே ஒரு திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரையறை எல்லாம் தாண்டி விட்டது உலகம்.

ஆம், யார் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் மனதிற்கு பிடித்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு வரையறைக்குள் உலகம் அடங்கி விட்டது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா ஜோடி:

அப்படியாக வயது முதிர்ந்து கிட்டதட்ட 40 வயதுக்கு மேல் ஆகி அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு பிரபலமான ஜோடியாக ட்ரெண்டிங்கில் வலம் வந்தவர்கள் தான் சீரியல் நடிகையான சங்கீதா நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

கிங்ஸ்லி திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், குணசத்திர கதாபாத்திரங்களையும் நடித்து தற்போதைய முன்னணி காமெடி நடிகராக பிரபலமான நடிகராக பேசப்பட்டு வருகிறார் .

இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் என்ற இடத்தில் தற்போது தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

சொந்தமாக அரசு கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து தொழில் செய்து வந்த ரெடின் கிங்ஸ்லி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்ததால் முதல் படத்திலே நயன்தாராவுடன் நடித்தார் என பேசப்பட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

கிங்ஸ்லியின் திரைப்படங்கள்:

அதன் மூலம் அவரது கேரக்டர் மக்களுக்கு மனதில் பதியும் படியாக அமைந்துவிட்டது. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களின் வாய்ப்புகள் அவருக்கு அடுத்தடுத்து கிடைக்க நெற்றிக்கண் திரைப்படத்தில் ரகசிய ஏஜென்ட் ஆக நடித்திருந்தார்.

அதன் பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “டாக்டர்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி மறைநிலை காவல் அதிகாரியாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக வந்தார்.

குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரெடின் கிங்ஸ்லி நடிப்பை கொண்டாடி தீர்த்தார்கள். அந்த அளவுக்கு அவர் மிகச்சிறந்த காமெடி நடிகராக பெயர் எடுத்தார் .

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தது மூலமாக குறுகிய காலத்திலே ரெடின் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

திடீர் திருமணம்… அது முதலில் வீட்டில் தான் நடந்துச்சு:

இதனிடையே சீரியல் நடிகையான சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்ட விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு சமூக வலைத்தளங்கள் முழுக்க அது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருந்தது.

அவர் முதல் முதலில் என்னை பார்க்க வந்ததே என் வீட்டில் தான். வேற ஒரு ஷூட்டிங்கில் இருந்து அவர் என்னை சந்திப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார்.

அப்போது என் அம்மாவுடன் தான் அவர் என்னை சந்தித்தார். என்னுடைய அப்பா இறந்ததற்கு பிறகு நான் அவரை ரொம்பவே மிஸ் பண்ணேன்.

அந்த நேரங்களில் எனக்கு அவர் கொடுத்த ஆதரவும், அரவணைப்பும் என்னுடைய அப்பாவை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது.

ஒருகட்டத்தில் இவர் செய்த பல விஷயங்கள் என்னுடைய அப்பாவை மறப்பதற்கான வழிகளை கொடுத்து மீண்டும் என்னை மகிழ்ச்சியான வைத்திருக்க உதவியது.

என்னுடைய அப்பாவுக்கு ஈடாக கிங்ஸ்லி இருந்தது என்னால் உணர முடிந்தது. அந்த சமயத்தில் தான் இவர் என்னுடைய வாழ்க்கையில் என் கூடவே இருந்தால் சிறப்பாக இருக்கும் என நான் நினைத்து அடுத்ததாக எங்களுடைய காதல் பயணத்தை ஆரம்பித்தேன் என சங்கீதா மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version