” தூக்கி எறியப்பட்ட மீன் கழிவு இயற்கை உரமா..!” – வீட்டுத் தோட்டத்துக்கு போடுங்க பாஸ்..!!

 வீட்டில் தோட்டம் மட்டும் இருந்தால் பத்தாது அந்தத் தோட்டத்தை திறம்பட நீங்கள் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் நல்ல முறையாக வளர்வதற்கு அவற்றுக்கு உரமிடுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

 தற்போது ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீட்டு செடிகளை வளர்த்து அதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெற முடியும். அந்த வரிசையில் இன்று மீன் அமினோ அமிலம் தயாரிப்பது எப்படி என்பதை எந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 மீன் அமினோ அமிலம் என்பது புதிதாக வந்த ஒரு பயிர் ஊக்கி கிடையாது. காலம் காலமாக நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு பயிர் ஊக்கி என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் மீன்களில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகள் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிக்கப்பட்டு செடிகளுக்கு கிடைக்கிறது.

 இதன் மூலம் உங்கள் செடி ஆரோக்கியமாக இருப்பது ஒரு மட்டுமல்லாமல் பசுமையாகவும் மிக அருமையான சத்துள்ள காய்களும் கிடைக்கும்.

 மீன் அமினோ அமிலம் தயாரிக்க தேவையானவை

1.வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட மீனின் பகுதிகள் அதாவது மீன் கழிவுகள்

2.பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை

3.காற்று புகாத பிளாஸ்டிக் பாட்டில்

செய்முறை

காற்று புகாத பிளாஸ்டிக் பாட்டில் முதலில் நாட்டுச்சக்கரை அல்லது பனைவெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக முடி 40 நாட்கள் வரை வெயில் படாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

 இடையே ஒரு நாள் மட்டும் பாட்டிலை திறந்து அந்த கலவையை நன்கு கலக்கி விடுங்கள். 40 நாள் கழிந்த பிறகு இதில் ஒரு திரவம் இருப்பது போல ஒரு நிலை உருவாகி இருக்கும்.

 இத்தோடு மீன் கழிவுகளை போட்டு விடுங்கள் மீன் கழிவுகளை போட்ட பிறகு ஓரிரு நாட்கள் கழிந்த பிறகு கனிந்த வாழைப்பழத்தின் வாடை வெளியே வரும் அப்படி வெளிவரும் சமயத்தால் தான் மீன் அமினோ அமிலம் தயாராகிவிட்டது என்று அர்த்தமாகிறது.

 இதனை அடுத்து இந்த தேன் போன்ற திரவத்தை 10 மில்லி அளவுக்கு எடுத்துக்கொண்டு அதை  ஒரு லிட்டர் நீரில் நன்கு கலந்து செடிகளின் வேர் பகுதியை விட்டு சற்று தள்ளி ஊற்ற வேண்டும்.

 வாரம் ஒரு முறை மட்டும் இந்த கலவையை நீங்கள் உங்கள் செடிகளுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. இயற்கையான இந்த உரத்தில் வளரக்கூடிய செடிகள் ஆரோக்கியமாக நல்ல காய்கறிகளை உங்களுக்கு வழங்கும்.

 உங்களுக்கு மீன் கழிவு கிடைக்கவில்லை என்றால் மீனைக் கூட பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம். நீங்களும் ஒருமுறை முயன்று பார்த்து உங்கள் வீட்டுத் தோட்ட செடிகளுக்கு உரமாக இதைக் கொடுத்துப் பார்த்தாலே உங்களுக்கு உண்மை என்ன என்பது புரிந்துவிடும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …