“கோயில் போகும்போது இதையெல்லாம் நீங்கள் ஃபாலோ பண்றீங்களா..!” – அப்படி இல்லையா இனி ஃபாலோ செய்தா நன்மை குவியும்..!!

இன்றெல்லாம் தினமும் கோயில் செல்லக்கூடிய பழக்கத்தை ஒரு கடமையாகவே நமது முன்னோர்கள்  வைத்திருந்தார்கள். கோயிலுக்கு செல்வதால் எண்ணற்ற நன்மைகளை அவர்கள் பெற்றார்கள்.

 ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கோயிலுக்கு செல்வது என்றாலே சலிப்பும் சங்கடமும் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஏனோ தானோ என்று கோயிலுக்கு சென்று வருபவர்களின் கூட்டம் அதிகரித்து விட்டது.

 அப்படி நீங்கள் கோயிலுக்குள் சென்றால் அங்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளது. அவற்றை நீங்கள் கட்டாயம் கடை பிடித்தால் நிச்சயமாக உங்களுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்து வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அமைதியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

கோயிலுக்குள் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்

👍கோவிலுக்குள் நீங்கள் சென்ற பிறகு தூங்குவது மிகவும் தவறான விஷயம் கோயிலுக்குள் தூங்குவது தவறு அதை செய்யாதீர்கள்.

👍கோயிலில் இருக்கும் கொடிமரம், நந்தி போன்றவற்றின் நிழல்களை உங்கள் கால்களால் மிதிப்பது மிகவும் தவறு.எனவே நிழல் விழக்கூடிய அந்த பகுதியில் நீங்கள் நடக்காதீர்கள்.

👍கோயிலுக்குள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். வீண் வார்த்தைகளை பேசக்கூடாது. கர்ப்ப கிரகத்தில் விளக்கு எரியாமல் இருக்கும் சமயத்தில் நீங்கள் வணங்குவது சிறப்பை  இல்லை.

👍அபிஷேகம் நடக்கும் போது மூலவரை சுற்றி வருவதோ அல்லது கோயில் கர்ப்ப கிரகத்தை சுற்றி வலம் வருவதோ ஆகாது.

 👍 கோவிலில் இருக்கும் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் கைகளால் தொட்டு வணங்குவது தவறு. மேலும் கைகளில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டுவது தவறு.

👍 கோயிலுக்குள் இருக்கும் போது மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது. கோயிலுக்கு சென்று திரும்பிய உடனேயே கால்களை அலம்புவது மிகவும் தவறு.

👍 படிகளில் உட்காருவக்கூடாது. சிவபெருமான் கோவிலில் அமர்ந்துதான் வரவேண்டும். பெருமாள் கோவிலில் அமரக்கூடாது. இவற்றை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

👍கோயிலுக்கு வாசம் இல்லாத மலர்களை கொண்டு செல்லக்கூடாது, மண் விளக்கு ஏற்றும் முன் அவற்றைக் கழுவி சுத்தம் செய்து தான் ஏற்ற வேண்டும்.

👍 கிரகண காலங்களில் கோவிலை சுற்றி வணங்கக் கூடாது. கோவிலில் வணங்கி விட்டு வரும்போது தர்மம் செய்யக்கூடாது.

👍 புண்ணிய தீர்த்தங்களில் முதலில் காலை நனைப்பதை விடுத்து விட்டு கைகளால் உங்கள் தலையில் தண்ணீரை தெளித்த பின்பு தான் கால்களை கழுவ வேண்டும்.

👍 படு வேகமாக கோவில்களில் வலம் வரக்கூடாது. நிதானத்தோடும் பொறுமையோடும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சுவாமிக்கு நெய்வேதியம் படைக்கும் பொருட்களை நீங்கள் சுவைத்துப் பார்ப்பது தவறு.

 மேற்குரிய விதிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் கட்டாயம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …