“அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய அற்புத ஆன்மீக குறிப்புகள்..!” – நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!!

மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த சக்தியை தான் ஆன்மீகம் என்ற பெயரில் நாம் வணங்கி வருகிறோம். அந்த வகையில் தினமும் நீங்கள் ஃபாலோ பண்ண வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள் உள்ளது.

 இவற்றை நீங்கள் கடைப்பிடிப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட ஆன்மீக குறிப்புகள் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மீக குறிப்புகள்

💐தினசரி காலையும் மாலையும் ஒவ்வொரு மனிதரும் சில நிமிடங்களாக ஒரு கடவுளின் பெயரை உச்சரித்து கடவுளை வழிபடுவது அவசியமான ஒன்றாக கூறப்பட்டுள்ளது.

💐காலை எழுந்தவுடன் நீங்கள் கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல பூக்கள், கண்ணாடி ,தீபம் போன்ற பொருட்களை பார்ப்பது மிகவும் நல்லது.

💐உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அதை கிழக்குப் பக்கமாக வையுங்கள். அதுபோல் வேப்பமரம் இருந்தால் நோய்களின் தாக்குதல்களில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். எந்தவிதமான விஷ ஜந்துக்களும் நம் வீட்டுப் பகுதிக்கு வராது.

💐செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜை அறையை நீரைக் கொண்டு நன்கு துடைத்து விடுங்கள்.அம்மவாசை, பௌர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும்.

💐சனி பகவானுக்கு உரிய எள் விளக்கினை வீட்டில் போடுவது ஆகாது. அதுபோல யாராவது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தால் அவர்கள் எழுந்த பிறகு தான் விளக்கை ஏற்ற வேண்டும்.

💐ஈர உடையுடன் நீங்கள் கடவுளை வழிபட்ட நேரிட்டால் ஓம் அஸ்தராய பட் என்று ஏழு முறை கூறி விட்டுத்தான் அந்த ஈர உடையை உடுத்தி கடவுளை வணங்க வேண்டும்.

💐வாழைப்பழத்தில் எளிதாக பக்தியை சொருகி வைக்கக் கூடாது. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வத்திற்கு நெய்வேத்தியம் செய்வது மிகவும் தவறான ஒன்றாகும்.

💐மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மாவிலை தோரணங்களை நீங்கள் இயற்கையான முறையில் தான் கட்ட வேண்டும். செயற்கை தோரணங்களை கட்டுவதன் மூலம் எந்த பலனும் இல்லை.

💐வலம்புரிச் சங்கு வைத்து வழிபடக்கூடியவர்களின் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் இந்த சங்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக மகான்கள் கூறி இருக்கிறார்கள்.

💐பூஜை செய்யும்போது தெற்கு,தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளை பார்த்து உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது. நெய்வேத்தியம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து “பிறகு அந்த உணவை மீண்டும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வது தவறு.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …