வாழ்வியல் ரகசியங்கள்

காலையில் படுக்கையிலிருந்து எழும்போது ஆண்கள் துரித உணவு பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். அதேபோல்  பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். அது போல எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் உறங்கும் போது மனம் எண்ணம் அமைதியடையும் இது இயற்கை நியதி. அப்படி இருக்கும் போது நம்முடைய நெருப்பு சக்தி கண்களின் வழியே வெளியே செல்லாது. உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும்போது சூடு உண்டாகி கண்களைத் தொடும்போது அவை கண்களில் நெருப்பை கிரகித்து நமக்குள்ளேயே வைக்கும் இந்த நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம்.

மலம் ஜலம் கழித்து முடித்த உடனேயே குளித்து விடவேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிப்பதால் உடலில் உள்ள சூடு சமப்படுத்தப்படுகிறது.

குளித்து முடித்த பின் தான் அடுக்களையில் சென்று உணவுப் பதார்த்தங்களை செய்யவேண்டும்.  நல்ல மனதோடு சமையல் செய்யும்போதுதான் சமையலில் சுவை கூடியிருக்கும். அத்தோடு ஆரோக்கியமும் பேணப்படும்.

உணவினை உண்ணும் முறை

உணவை உண்ணும் முன் கைகளில் ஒற்றிக்கொண்டு உண்ண வேண்டும் அல்லது பார்த்து உண்ண வேண்டும்.  கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை நம் கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடாது.

உணவை எடுத்துக் கொள்ளும் முன் கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவி, பிறகு கால்களை தரையில் மடக்கி அமர்ந்து உண்ணவேண்டும். வலது கையில் நீர் ஊற்றி குடிக்க வேண்டும். கால்களை மடக்கி அமர்வதால் கல்லீரல் மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும் சர்க்கரை நோய் வராது. உள்ளங்கையில் நீர் ஊற்றி குடிப்பதால் பல அற்புதங்கள் உடம்பின் உள்ளே நடப்பதை உணர முடியும். 

உணவு உண்ணும் போது இடையிடையே நீர் அருந்தக்கூடாது.உணவை உண்ட அரைமணி நேரம் கழித்த பிறகு தான் நீர் அருந்த வேண்டும்.

வயிற்றில் உள்ள வெப்பமானது செரிமானத்தை தயார் செய்துவிடுகிறது. பசி எடுக்கும்போது தான் உண்ண வேண்டும். நேரம் தவறி உண்பது மற்றும் துரித உணவுகளை உண்பதால் நமக்கு நோய்களை உண்டாக்கும்.

மேற்கூறிய இந்த வழிமுறைகளை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைப்பிடித்து வந்தால் என்றும் இளமை உள்ள மார்க்கண்டேயன் போல் வாழலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …