“குடும்பத் தலைவிகள் கட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்க..!”- ஹெல்த்தியா இருக்க..!

தினமும் சமையல் அறையில் அதிகளவு நேரத்தை செலவிடக் கூடிய குடும்ப தலைவிகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே செலவிடக் கூடிய குடும்ப தலைவிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 இந்த விஷயங்கள் சமையலறையில் சமையல் செய்பவர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயங்கள் ஆகும். இதன் இதனை நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் குடும்ப ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அப்படி என்ன முக்கியமான சமையல் குறிப்புகளை நீங்கள் தெரிந்து கொண்டு உங்கள் சமையலை அதற்கு தக்கவாறு நீங்கள் செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.

சமையலறையில் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சில டிப்ஸ்

👍நம் சமையல் அறைகளில் பாரம்பரியமாக மிளகை முக்கிய பொருளாக பயன்படுத்துகிறோம். குறிப்பாக அதிக அளவு தென்னிந்திய சமையல் மட்டுமல்லாமல் வட இந்திய சமையல் அறையிலும் இந்த மிளகு தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

 ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மிளகில் ரசாயன உரம் போட்டு வளர்த்து கொடுக்கிறார்கள். எனவே அந்த ரசாயன பாதிப்புகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள நீங்கள் வாங்கி வரும் மிளகை பயன்படுத்தும் போது ஒருமுறை சுடுநீரில் போட்டு பிறகு அதனை எடுத்து பயன்படுத்துங்கள்.

 இதன் மூலம் நீங்கள் இரசாயன பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் உணவினை மிளக்கோடு பயன்படுத்தும் போது எண்ணற்ற ஆரோக்கியத்தை பெறுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் உங்களுக்கு கிடைக்கும்.

👍பூண்டினை உங்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் போது அதை உரித்து எடுப்பதற்காக நீங்கள் படாத பாடு படுவீர்கள். இனி அப்படி சிரமப்படாமல் இருக்க நீங்கள் பூண்டினை லேசாக வாணலியில் போட்டு வறுத்து விட்டு பிறகு எடுத்து இளம் சூட்டில் உரித்தால் பூண்டு தோல் எளிதில் வந்து விடும்.

👍நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அப்பளம் கெடாமல் இருக்க அப்பளத்தை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து அதன் அடியில் சிறிது உப்புக் கல்லை போட்டு மேலே இதை வைத்தால் போதும் எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாது.

👍கோதுமை மாவு, ராகி மாவு போன்ற மாவுப்பொருட்கள் கெடாமல் இருக்க நீங்கள் அந்த மாவுப் பொருட்கள் வைக்கும் பாத்திரத்தில் நான்கு ஐந்து பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் போதுமானது.

👍உங்கள் வீட்டில் வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்தை அதிகம் பயன்படுத்தினால் இரத்த சோகை நோயிலிருந்து பாதிப்பு ஏற்படாது. மேலும் இது மலச்சிக்கல் தொல்லையை அறவே ஒழிக்கட்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …