தேர்வு சமயம் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் பற்றி பார்ப்போமா?

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ஆரம்பமாகக் கூடிய சூழ்நிலையில் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் என்னென்ன அந்த உணவுகளை அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இதன் மூலம் அவர்கள் படித்த அனைத்தையும் தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அந்த வகையில் இந்தக் கட்டுரையில் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய பொருட்கள்  பற்றி பார்க்கலாம்.

மாணவர்களின் ஞாபக சக்தியை தூண்டும் உணவுகள்

பாதாம்,பிஸ்தா, முந்திரி போன்ற உலர்ந்த நட்ஸை சாப்பிடுவதின் மூலம் மாணவர்களின் ஞாபக சக்தி அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் தானிய வகைகளை எடுத்துக் கொள்வதின் மூலம் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே தினமும் சிறிதளவு நட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.

பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளில் அதிக அளவு மூளையை புத்துணர்வாக வைத்துக் கொள்ளக்கூடிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் அதனை தேர்வு சமயத்தில் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

தேர்வுக்கு செல்வதற்கு முன்பு நீங்கள் தேனை சிறிதளவு சாப்பிட்டு விட்டு சென்றீர்கள் என்றால் கட்டாயம் உங்களுக்கு ஞாபக மறதி ஏற்படாது. நிச்சயம் உங்களுக்கு இது மிகவும் சிறப்பாக பயன்படும். நீங்கள் நினைத்ததை அப்படியே எழுதுவீர்கள்.

தேர்வு சமயத்தில் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக முட்டையை உங்கள் உணவில் கட்டாயம் சேர்ப்பதன் மூலம் உங்களது ஞாபக சக்தி மேலோங்கும்.

மிளகினை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாவதோடு மட்டுமல்லாமல் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

வல்லாரைக் கீரையை உங்கள் உணவில் சாப்பிடுவதின் மூலம் கட்டாயம் இது உங்கள் மூளையின் திறனை மேம்படுத்தக்கூடிய சக்தி படைத்தது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கீரையை உங்கள் குழந்தைகளுக்கு  உண்ண பழகி விடுவதின் மூலம் அவர்களின் ஞாபக சக்தி மேம்பாடு அடையும்.

மேலும் தேர்வு சமயத்தில் நீங்கள் அதிக அளவு நீரை அருந்துங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு ஞாபக சக்தியும் அதிகமாகும்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய குறிப்புக்களை நீங்கள் கட்டாயம் பாலோ செய்வதின் மூலம் தேர்வில் எந்த விதமான ஞாபக மறதியும் உங்களுக்கு ஏற்படாது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …