“எப்பவுமே சம்மர் வந்தா இந்த உணவு வகைகளை டேஸ்ட் பண்ணாதீங்க..! – விளைவு படுமோசமாகும்..!

எப்போதுமே சம்மர் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும் இதற்கு காரணம் விடுமுறை தான். இந்த விடுமுறையில் இவர்களுக்கு பிடித்ததை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம் என்ற எண்ணமும் பல இடங்களுக்கு வெளியே சுற்றுலா செல்லக்கூடிய சூழ்நிலைகளை எந்த விடுமுறை உண்டாக்கி கொடுக்கும்.

Avoid these summer Food

அந்த வகையில் சம்மருக்கு ஏற்ற உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் உடலில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. அதை விடுத்து தேவையில்லாத உணவுகளை நீங்கள் உண்பதின் மூலம் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். எனவே சம்மரில் எந்த உணவுகளை உண்ணக்கூடாது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவை பார்க்கலாம்.

சம்மரில் உண்ணக்கூடாத உணவு வகைகள்

இந்த சம்மர் மட்டுமல்ல எப்போது சம்மர் காலம் வந்தாலும் நீங்கள் துரித உணவுகளை உண்ணுவதை தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் விரும்பி சாப்பிடும் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு மிதமான உணவுகளை சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது.

Avoid these summer Food

உடலில் வெப்பநிலையை அதிகரிக்க கூடிய மைதா உணவுகள், வேர்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை கோடை காலத்தில் தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது இதன் மூலம் உங்களது ஆரோக்கியம் அதிகரிக்கும்.

காய்கறிகளைப் பொறுத்தவரை கத்திரிக்காய், கிழங்கு வகைகள் மற்றும் மாவு வகை உணவுகளை உண்பதை தவிர்த்து விடுவது இந்த கோடைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

வீட்டில் தானே இருக்கிறோம் என்று அடிக்கடி காபி, தேநீர் போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக கூழ் வகைகளை நீங்கள் குடிக்கலாம்.

Avoid these summer Food

வெயில் காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள் குறிப்பாக பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை மசாலா போன்றவற்றை உங்கள் உணவில் குறைவாக சாப்பிடுங்கள்.

பால் பொருட்களை பொருத்தவரை சீஸ், பால், தயிர் போன்றவற்றை அளவாக எடுத்துக் கொண்டால் நலமாக இந்த கோடையை நீங்கள் கழிக்க முடியும்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை மனதில் கொண்டு உங்கள் உணவு வகைகளை கட்டாயம் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி மிதமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …