“Low BP இருக்கா..!” – அப்ப உங்க குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்யும் உணவுகள சாப்பிடுங்க..!!

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் இதயத்துக்கு ரத்தம் உள்ளே செல்லும்போதும் வெளியே வரும்போதும் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தோடு செல்கிறது. இதைத்தான் நாம் இரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.

 இந்த இரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அது கூடினாலும் குறைந்தாலும் சற்று சிரமங்கள் எற்படுவது இயல்பு தான்.

குறைந்த இரத்த அழுத்த அறிகுறிகள்

ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு தடை சுற்றல், மயக்கம், வாந்தி, நா வறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டு கட்டுவது, மனக்குழப்பம் போன்றவை ஏற்படு.ம் மேலும் உடல் சில்லிட்டு போவது, மூச்சு வாங்குவது போன்ற அறிகுறிகளை இதற்கு கூறலாம்.

அந்த வகையில் இன்று குறைந்த அளவு ரத்த அழுத்தம் உடையவர்கள் என்னென்ன உணவுகளை உண்பதினால் குறைந்த ரத்த அழுத்தத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

குறைந்த இரத்த அழுத்தம் உடையவர் உண்ண வேண்டிய உணவுகள்

பட்டாணியானது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவி செய்யும். இதில் இருக்கக்கூடிய ப்ரோட்டீன்கள், வைட்டமின்கள், போலிக் அமிலம் உங்கள் இதய பராமரிப்பு உதவி செய்வதால் வாரத்தில் ஒரு முறை பட்டாணியை பச்சையாகவோ அவித்த உண்ணலாம் அல்லது முளைகட்டி சாப்பிட்டாலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

ஸ்டார்ச் பொருட்கள் அதிகமாக இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்ளும்போது உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படாது. மேலும் வைட்டமின் சி உள்ள உணவுகள் பழங்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 மேலும் உணவில் சிறிதளவு அதிகமாக உப்பு,  ஊறுகாய், காபி மற்றும் தண்ணீரை அதிகளவு நீங்கள் சேர்த்துக் கொள்ளுவது. உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவி செய்யும்.

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாகவும் இந்த ரத்த அழுத்த குறைபாடு ஏற்படலாம். எனவே இது அதிகமாக இருக்கக்கூடிய தானிய வகைகள், விலங்குகளின் இறைச்சி, ஈஸ்ட் போன்றவற்றை நீங்கள் சாப்பிடுவது உங்களது குறைந்த இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

மேலும் நீங்கள் ஃபோலேட்  நிறைந்த உணவுகளான ஆஸ்பெராகஸ், பீன்ஸ், பயறு வகைகள், பச்சை இலை கீரைகள், முட்டை, ஈரல் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

 மேற்கூறிய உணவுகளை நீங்கள் தினமும் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் கட்டாயம் உங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் இதை கடைபிடித்து பாருங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …