“முகப் பராமரிப்பு முக்கியம் தான் ..!” கூடவே பாதத்தேயும் கியூட்டா பாத பராமரிப்பு – குட்டி குட்டி குறிப்புக்கள்

முகத்தை நாம் எப்படி முக்கியமாக நினைத்து அதன் அழகை கூட்ட நினைக்கிறோமோ அது போலவே பாத பராமரிப்பும் மிக முக்கியமான ஒன்றுதான்.

 நமது உடலை தாங்கி நிற்கக்கூடிய உறுப்பாக விளங்கக்கூடிய பாதங்களை பக்காவாக பராமரித்து  வரவேண்டிய அவசியம் என்று கட்டாயம் உள்ளது.

 உங்கள் பாதத்தை பராமரிக்க உதவும் குட்டி குட்டி குறிப்புகள்:

😊வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் உங்கள் பாதத்தில் இருக்கக்கூடிய நகங்களை வெட்டி தூய்மை படுத்த வேண்டும்.

😊அதுமட்டுமல்லாமல் நெகத்தின் கீழ் பகுதியில் அண்டி இருக்கும் அழுக்குகளை அவசியமாக நீங்கள் நீக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் நகங்கள் சொத்தை ஆவதோடு நகக்கண்களில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

😊மேலும் நீங்கள் நகத்தை வெட்டாமல் இருந்தால் அது வளைந்து உள்நோக்கி வளரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் நீங்கள் உங்கள் நகங்களை வெட்டி விடுங்கள்.

😊 படுக்கைக்கு செல்வதற்கு முன்போ அல்லது காலையில் எழுந்த உடனோ சிறிது நேரம் உங்கள் பாதங்களை வெதுவெதுப்பான வெந்நீரில் வைத்து ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

😊 பாதத்தில் உங்களுக்கு அதிக அளவு வெடிப்புகள் இருந்தால் மருதாணி இலையை அரைத்து பூசலாம். இல்லையென்றால் மஞ்சளை தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயோடு கலந்து பூசி வருவதால் பாத வெடிப்பு சரி ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

😊 பாத வெடிப்பால் ஏற்படும் கருமை நிறம் போக உருளைக்கிழங்கை காயவைத்து மாவு போல் அரைத்து நீரில் குழைத்தோ அல்லது வெண்ணையில் கலந்தோ பூசி வந்தால் பித்த வெடிப்பால் ஏற்படக்கூடிய கருப்பு நிறம் போய் பாதம் பளிச்சென்று மின்னும்.

😊 எப்போதுமே காலணிகளை அணிந்து கொண்டு வெளியே செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் செயற்கையாக நிறம் பூட்டப்பட்ட எந்த ஒரு பொருட்களையும் உங்கள் காலில் அணிய வேண்டாம்.

😊 தினமும் குளிக்கும் போது தேங்காய் மஞ்சள் அல்லது பீர்க்கங்காய் நார் கொண்டு உங்கள் பாதங்களை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் பாதம் மிருதுவாக மாற ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற இடைவெளியில் பல சாறை எடுத்து உங்கள் பாதங்களில் நன்றாக தேய்த்து பின் கழுவி விட்டால் போதும்.எந்த ஒரு கிருமிகளும் உங்கள் பாதத்தில் அண்டாது.

😊 காற்றோட்டம் உள்ள செருப்புகளை அணிவதின் மூலம் உங்களுக்கு செருப்புகளால் ஏற்படக்கூடிய புண்கள் ஏற்படுவதை தவிர்த்து விடலாம். குறிப்பாக இந்த முறைகளை சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் கடைப்பிடித்தால் பாதத்தில் ஏற்படும் குழி புண்னை தவிர்க்க முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam