“சுட்டி குட்டிஸ் உங்க வீட்டில் இருந்தா..!” – அந்த அழகு குறிப்ப யூஸ் பண்ணுங்க..!

உங்கள் வீட்டில் குட்டிக் குழந்தைகள் அது தான் சுட்டி குட்டிஸ் இருந்தால் அந்த குழந்தைகளின் மேனியை பராமரிக்க இந்த அழகு குறிப்பை யூஸ் பண்ண வேண்டும். அவ்வாறு நீங்கள் யூஸ் பண்ணும் போது நிச்சயமாக அவர்கள் வீட்டு சுட்டி குழந்தைகளின் மேனி அழகு மெருகேறி விடும்.

குட்டீஸ் காண அழகு குறிப்புகள்

Baby beauty tips

குழந்தைகளின் கை, கால்களில் இருக்கும் நகத்தை குளித்த பிறகு நீங்கள் வெட்டுவதின் மூலம் சிரமம் இல்லாமல் எளிதாக வெட்டி விடலாம்.

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்தி விட வேண்டும். இதற்காக நீங்கள் பேபி மவுத்வாஷை கூட பயன்படுத்தலாம்.

Baby beauty tips

குழந்தைகளின் ஹேர் ஸ்டைலிங் செய்ய அழகாக கூந்தலை வெட்டி பராமரிப்பது அவசியம். தினமும் தேங்காய் எண்ணெயை லேசாக சூடு செய்து தலையில் தேய்ப்பதின் மூலம் விரைவில் அவர்களுக்கு சளி பிடிக்காது.

தினமும் குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வையுங்கள். வாரத்தில் இரண்டு முறை தலைக்கு குளிக்க வைப்பது அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Baby beauty tips

பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகளின் உடலில் இருந்து பால் வாடை வீசுவதை தவிர்க்க நீங்கள் குழந்தைகள் பால் குடித்து முடித்ததுமே கை, கால்களை துடைத்து கழுவி விடுவது நல்லது. மேலும் குளிக்க வைக்கும் போது கஸ்தூரி மஞ்சளை போட்டு குளிக்க வைத்தால் பால் வாடை ஏற்படாது.

குழந்தைகளின் சருமத்தை பராமரிக்க தினமும் அவர்கள் உடலில் மசாஜ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து விடுங்கள். அவர்கள் உடல் எப்போதும் மென்மையாக இருக்க இது உதவி செய்வதோடு ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

குழந்தைகளை வெளியே எடுத்துப் போகும்போது கட்டாயம் அவர்களுக்கு கால் அணிகளை அணிந்து எடுத்துச் செல்லுங்கள்.

Baby beauty tips

மேலும் கைகளில் கட்டாயம் வசம்பு வலைகளை அணிந்து விடுங்கள். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு எளிதில் தொற்றுகள் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.

நீங்கள் முடிந்தவரை குழந்தைகளுக்கு இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள். செயற்கை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

மேற்கூறிய குறிப்புகளை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து பார்த்து அதன் மூலம் ஏற்படும் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …