“உங்கள் சமையலை மேலும் சுவையாக …! ” இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க பாஸ்..!!

 உங்கள் வீட்டில் நீங்கள் அசத்தும் சமையல் மேலும் சுவையாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அட இது நாம் சமைத்த உணவா என்று ஆச்சரியத்தை உங்களுக்கே வரவழைக்கக்கூடிய அற்புதமான இந்த சமையல் டிப்ஸை ஃபாலோ செய்து நீங்கள் சமைத்தால் நீங்களும்  எளிதில் நள சக்ரவர்த்தியாக மாறலாம்.

சமையலில் கூடுதல் சுவை சேர்க்க  சில டிப்ஸ்

👌 எப்போதுமே நாம் பாயாசம் செய்யும் போது முந்தரி, திராட்சையை நெய்யில் பொரித்து போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதன் அளவை சற்று குறைத்துக் கொண்டு அதனோடு பேரிச்சம் பழத்தை நெய்யில் வறுத்து போட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு பாயசத்தின் சுவையும் கூடுதலாகும்.

👌 நீங்கள் தாளிக்கும் போதும் அல்லது தோசை மாவு, பொங்கலுக்கு சீரகத்தை பயன்படுத்துவீர்கள். அந்த சீரகத்தை அப்படியே போடாமல் உங்கள் கைகளில் எடுத்து வைத்து நன்கு தேய்த்து விட்டு போட்டால் சீரக வாசம் வீட்டை தூக்கும். மேலும் மண மணக்க நீங்கள் பொங்கல் மற்றும் மற்ற பொருட்களையும் உண்டு மகிழலாம்.

👌 பாகற்காயை சமைக்கும் போது கசப்பு ஏற்படுகிறது என்றால் முதல் நாள் பாகற்காயில் மேல் இருக்கக்கூடிய அந்த முள் போன்ற பகுதியை நீக்கிவிட்டு காயை நறுக்கி தரையில் அப்படியே போட்டு விட்டு மறுநாள் காலை அதை எடுத்து கழுவி நீங்கள் உங்கள் சமையலில் பயன்படுத்தினால் அந்த அளவு கசப்புத் தன்மை அதில் இருக்காது.

👌 இட்லி பொடிக்கும்போது ஒரு கைப்பிடி அளவு கொள்ளை வறுத்து நீங்கள் போட்டு பொடித்தால் இது உடல் எடையை குறைக்க உதவி செய்வதோடு நல்ல மணமாக இருக்கும்.

👌 தக்காளி குருமாவுக்கு வெங்காயத்தை நீங்கள் பச்சையாக அரைத்து ஊற்றி செய்தால் சுவை கூடுதலாக ஏற்படும். மேலும் வெங்காயத்தைப் பிடிக்காதவர்கள் அதை எடுத்து வெளியே போட வேண்டிய அவசியமும் இல்லை.

👌 இஞ்சி, பீட்ரூட் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்காமல் மணலில் சிறிதளவு நீர் தெளித்து அதனுள் வைக்கும் போது பிரசாக இருக்கும்.

👌 சாம்பார் வைக்கும் போது புளியை குறைத்து போட்டு மலை நெல்லிக்காயை மசித்துப் போடுவதின் மூலம் சாம்பாரில் புளிப்பு தேவையான அளவு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவி செய்யும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …