“வீட்ல சீலிங் ஃபேன் வேகமாக ஓடலையா..!” – இத மாத்தி பாருங்க ஸ்பீடா இருக்கும்..!

குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும் எனவே அதிகளவு சீலிங் ஃபேன் நம் வீடுகளில் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதற்கு நேர் மாறாக கோடை காலத்தில் மின்விசிறியை போடாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

Fan

இப்படி நாள் முழுவதும் கோடையில் நாம் மின்விசிறியை பயன்படுத்துவதன் மூலம் அதன் ஓடும் வேகம் விரைவில் குறைந்துவிடும். இது உங்களுக்கு நன்றாக கவனித்தால் தெரியும். அப்படி உங்கள் வீட்டில் மின்விசிறி வேகமாக ஓடாமல் இருந்தால் அதன் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்பது பற்றி எந்த பதிவில் பார்க்கலாம்.

மெதுவாக சுற்றும் மின்விசிறியை வேகமாக சுற்ற வைக்கும் டெக்னிக்

ஐந்தில் வைத்தாலும் உங்கள் வீட்டு மின்விசிறியில் இருந்து போதிய அளவு காற்று வரவில்லை என்றால் அதற்கு பல காரணங்களை நாம் கூறலாம்.

Fan

உங்கள் மின்விசிறிகளின் இறக்கைகளில் அழுக்குகள், தூசிகள் அதிகமாக இருக்கும். அதை நீங்கள் உடனுக்கு உடனே நீக்கிவிட்டு பரிசோதனை செய்து பாருங்கள்.

இப்போதும் பேன் இறகுகளில் இருக்கக்கூடிய அடுக்குகளை நீக்கிய பிறகும் இந்தப் பிரச்சனை உங்களுக்கு அதிக அளவு உள்ளதா? அதே அளவு தான் காற்று வருகிறது என்றால், அதற்கு ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது. இதனை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் பேனில் சுற்றும் திறனை அதிகரித்து விட முடியும்.

Fan

இதற்கு நீங்கள் கண்டென்சர் என்ற ஒரு பொருளை உங்கள் மின்விசிறியில் இருந்து மாற்றி விட்டு புதிய கண்டன்சரை போடுவதின் மூலம் உங்கள் பேன் மிக ஜோராக வேகமாக சுற்றும்.

இந்த பொருளானது எல்லா எலக்ட்ரிக்கல் கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் விலையும் குறைந்த அளவு தான் இருக்கும். இதனை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். எனவே உங்கள் பேனில் கன்டென்சரை மாற்றிவிட்டு இப்போது பேனை போட்டு பாருங்கள் கண்டிப்பாக உங்கள் மின்விசிறி மிக வேகமாக சுழலும்.

Fan

எனவே இனிமேல் உங்கள் வீட்டு மின்விசிறி வேகமாக சுழலவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இது போன்ற குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்து அதனை சரி செய்து விட முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …